வாசகர் விமர்சனம்
சுரைக்காய் வெயில் காலத்துக்கு ஏற்ற காய் . குளிர்ச்சி தரும்.
இந்தியச் சேம வங்கியும் வாட்சப் சேனலை அறிமுகம் செய்திருக்கிறது.நல்லது.
போலி விளம்பரங்ஙளையும் நம்பகமற்ற தகவலையும்
நம்ப மக்கள் ஏமாற மாட்டார்கள்.
அக்னிவீர் ஆன்லைன் பதிவுக்கு ஏப்ரல் 25 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.பரவாயில்லை. தெரியாமல் இருந்தவர்கள் தெரிந்து விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு.
கடன்வாங்கி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டுத் தப்பிய மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதுபோல் வெளிநாட்டுக்குத் தப்பிய பிறரும் கைதாகட்டும்.உரிய விசாரணை தண்டனை கடன் பணவசூல் எல்லாம் இருக்கு.
சமையல் பகுதி பல்சுவைப் பகுதி புதுக்கவிதை வாசகர் கடிதம் அருமை
பல்சுவைப் பகுதி பல புதிய குறிப்புகளைத்
தரும் பகுதி .
வத்திராயிருப்பு பிஎஸ்பி பொன்னுச்சாமி வரலாறு அருமை. சும்மாவந்ததல்ல சுதந்திரகலா நர
இல்லத்தரசிகளுக்கு
சமையல் குறிப்பு பயனுள்ளதே.
பாட்டும் நானே பாவமும் நானே தலைப்பக் கேற்ற செய்தி கட்டுரையின் உள் இல்லை. வாட்சப் பேஸ்புக்கில் சமீப காலமாக வந்து கொண்டிருப்பதால் படித்ததை வைத்துச் சொல்கிறேன் திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் வரும்
பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் காமு
ஷெரிப் .
எதிரி நாட்டு விமானங்களைக் கண்டறிந்து தாக்கும் லேசர் சோதனையில்்வெற்றி பெற்று முண்ணணி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது . சாதனை.
-சிவ சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி