tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ.சே. முத்துவிநாயகம்)-20.04.25

வாசகர் கடிதம் (சிவ.சே. முத்துவிநாயகம்)-20.04.25


   பன்முகம் இதழில் 

ஏழாங்கல் விளையாட்டு,

கோயில்கள் ஏன் எதற்கு கட்டினார்கள் ,

ஸ்மார்ட் போனாக மாற வேண்டும், கல்லீரலன் வேலைகள் மது அருந்துவதால் பாதிக்கும் விதம், இந்தியாவின் 3 வது கோடீசுவரப் பெண்மணி ரோஷினி மல்ஹோத்ரா, கதை கட்டுரைகள் எனப் பன்முகம் காட்டியிருந்தது. அருமை.

      தனியார் பள்ளிகளுக்கு இணையாக கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள நகராட்சிப் பள்ளி செயல்படுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல் மற்ற நகராட்சிகளும் தத்தம் பள்ளிகளை மேம்படுத்தலாமே.

      தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 15 லட்சம் ஆண்டுகள் கொண்டது எனத் தொல்லியல்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் தெரிவித்திருப்பதோடு 

நான் பிறந்து வளர்ந்த என் சொந்த ஊரான சிவகளை இரும்பின் தொன்மையை வெளிப்படுத்துவதாகக்

குறிப்பிட்டுள்ளது மனமகிழ்வைத் தருகிறது.

      மத்தியப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்த ஆசிரியர் தற்காலிகப் பணிநீக்கம்

       இராமநாதபுரம் மண்டபத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?

     நாவற்பழம் திராட்சைப்பழப் பயன்கள் தனிச் சிறப்பானது.

     பிஎஸ் இராமையா எழுதிய போலீஸ்காரன் மகள், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் நாடகங்கள் திரைப்படமாகி வெளிவந்தது . இன்றும் மறக்க முடியாது நினைவில் நிற்கிறதே.

      கொடைக்கானல் போய்வந்த இடம் தான். சில இடங்கள் விடிபட்டுள்ளது போல் தெரிகிறது. கோடை வெயிலுக்கு குளுகுளு இடம் தான்.

       சின்னஞ்சிறு கோபுவின் மணியுடன் சண்டைக்காக மணி என்ற பெயருடையோரை வெறுக்கும் மனிதர் பற்றிய நகைச்சுவை நகைப்பு தான்.

    அனைத்து கவிதைகளும் அருமை.

  இன்று பல சோதிடர்களும் இதைத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒன்றைச் சொல்லி பொருத்தமில்லை என்பதும் தோசம் நீக்க பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பதுமான பாவச் செயல்களை அரங்கேற்றுகிறார்கள். அது தெய்வீகக் கலை என்பது போய் பணம் பறிக்கும் தொழிலாக உருமாறி விட்டது.

      ஏன்வேண்டாம் கதையில் மொய் செய்து விட்டு உணவுண்ணாமல் வந்துவிட்டதாகப் பின்னப் பட்டுள்ளது.

மொய் செஞ்சு கை நனைக்காம வரக் கூடாது என்பார்களே!


- சிவ.சே. முத்துவிநாயகம்

 திருநெல்வேலி