tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-10.04.25

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-10.04.25


 நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு புதிய வழக்கு. முன்னர் நீட் தேர்வு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டசபையின் மசோதாவை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 2017 ம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவபடிப்பு பண வசதிக்காக நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. இது எல்லா மாநிலங்களிலும் அமலில் இருப்பது நாம் அறிந்ததே. இதில் குறிப்பாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் மாணவர்கள் மட்டுமே இதில் தேர்ச்சி பெற முடியும். மேலும் நீட் தேர்வு பொருளாதார வளம் உள்ளவர்களுக்கு சாதகமாக உள்ளது என்று ஏகே ராஜன் அவர்களின் குழு கண்டறிந்தது. சட்டப் போராட்டத்தை சரியாக நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்பது தான் செய்தி. தேர்தல் நெருங்குவது உள்ளங்கை நெல்லிக்கனி. எதுவும் நடக்கும்.


 அமித்ஷா அவர்கள் இன்று இரண்டு நாள் சென்னை வருகிறார். அவர்கள் பாஜகா பிரமுகர்களை சந்தித்து விட்டு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தின் பாஜக தலைவர் யார் என்பது விவாதிக்கப்படலாம் என்றும் அவருடைய இந்த வருகை அரசியல் சூழ்நிலையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இனி எல்லாருடைய வருகையும், வருவதும் போவதும் அரசியல் சம்பந்தப்பட்டது தான். 


 காங்கிரஸ் மூத்த தலைவரரும் முன்னாள் அமைச்சருமான குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார். 

 சமூக சேவை மற்றும் தமிழக அதற்கான ஆர்வத்துக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என்று நமது பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உண்மை தான். 


 கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு 36 சவரன் இடை கொண்ட தங்க கிரீடத்தை தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர் இதை செலுத்தினாராம். குலோத்துங்கன் என்ற பெயர் வைத்தாலே வாரி வழங்குவார்கள் போல. மேலும் கோயில் பற்றிய விசேஷ பகுதி விவரமாக படத்துடன் அழகு. குறிப்பாக பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமியில் திருவண்ணாமலை கோபுரம் ஜொலிக்கும் அழகு அற்புதம்.


 இன்னும் சுவாரசியமான செய்திகளுக்கு வருவோம். ஆன்மீக துறவி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மேலும் கமுதியில் வினோத நேத்தி கடன் செலுத்திய பக்தர்கள். சென்னை நேரு பூங்காவில் மகளிருக்கான பன்முக கலாச்சார போட்டிகளை முதன்முதலாக துணை முதல்வர் துவங்கி வைத்தார். 


 டாஸ்மார்க் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம் என்று எம் முருகன் அவர்கள் ஸ்டாலின் அவர்கள் மீது விமர்சனம். அடடா. 


 தண்டவாளத்தில் படித்து ரீல்ஸ் எடுத்த லக்னோவை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆபத்தான முறையில் அவர் தண்டவாளத்தை படுத்திருந் தார். சிறிது பிசகினாலும் அவருடைய உயிர் பிரிந்திருக்கும். நிலையில் அவர் எடுத்திருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரல் ஆகியது. அது ரயில்வே போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் அவர் மேல் வழக்கு பதிவு செய்தனர். எதற்கு தான் ரிஸ்க் எடுப்பது என்று தெரியவில்லை. வீட்டுச் சண்டை வீதி வரை. இது புரியாமல் ரீல்ஸ் என்கிறார்கள்.


 காற்று, சூரிய மின் உற்பத்திக்கு இந்தியா மூன்றாவது இடம். இந்த அறிக்கையை வெளியிட்டது பிரிட்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான எம்பர். சூப்பர். 


 உணவு இயற்கை உபாதைகளுக்கு இடைவேளை இல்லை. லோகோ பைலட்டுகளுக்கு ரயில்வே கெடுபிடி. ரயில் ஓட்டுநர்களுக்கு உணவு இடைவெளிக்கும் இயற்கை நிமித்தமாக செல்லவும் இடைவெளி வழங்க சட்டம் இயற்றுவது சட்டரீதியாக சாத்தியம் இல்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. சரியா போச்சு. அடுத்த போராட்டம் ஆரம்பம். தெனாலி ராமன் கதை தான் நியாபகம் வருகிறது.


 ரெப்போ வட்டி விகிதம் 0.25 ஆக குறைந்தது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு நல்ல விஷயம்.


 அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க செந்தில் பாலாஜி அவர்கள் முடிவு. அருமை.


 பணியில் இருந்த போது உயிரிழந்த திருவாரூர் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு 30 லட்சம். டேக்ஸ் பிடிக்காம இருக்கணும் பாவம்.


 ஆள்மாறாட்டம் போலி ஆவணங்கள் மூலம் 5 கோடி மதிப்புடைய வீடு அபகரிப்பு. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது. அப்படி போச்சா. ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்யும் அளவிற்கு எப்படி விடுகிறார்கள். ரொம்பவே ஆச்சரியம். அதுவும் இது நடந்தது ஒரு சேட்டுக்கு. ஐந்து பைசா கூட விட மாட்டார் வியாபாரத்தில். எப்படி கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு போல.


 அடுத்த செய்தி இன்னும் சுத்தம் பெண்கள் போல் சேலை அணிந்து 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று லட்சம் மோசடி. அந்த ஆளுங்க எல்லாம் தடுக்குல நுழைஞ்சா கோலத்தில் நுழைவார்கள் போலிருக்கிறது. புத்தி எல்லாம் இப்படி குறுக்கு வழியில் தான் செலவிடுவார்கள் போல.


 கதைகள் கவிதைகள் நூல் விமர்சனம் அனைத்தும் அருமை. முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்பொழுதெல்லாம் தரிசிக்கலாம் என்கிற கட்டுரை நன்றாக இருந்தது. குறிப்பாய் அந்த செய்தியில் நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்காரமும் முடியாத விஷயங்களுக்கு ஆண்டி அலங்காரமும் என்கிற விஷயம் புதுமை. தினம் ஒரு தலைவர்கள் வழக்கம்போல் அருமை.


 என் நண்பர் ஒருவர் போன் செய்து ஜெயந்தி சுந்தரம் இல்லாத வாசகர் கடிதம் என்னவோ போல் இருக்கிறது என்றார். ஆஹா. பரவாயில்லையே இதை கூட கவனிக்கிறார்கள். வாசகர் கடிதம் வர வர நன்றாகவே இருக்கிறது.


 வாங்க சம்பாதிக்கலாம் பகுதி ரொம்பவே அருமையாக இருக்கிறது அதில் குறிப்பாய் ஒன்று நெல்லிக்காய் மிட்டாய் ரொம்பவும் எளிமை. 


 மூன்று நாள் சரிவுக்கு பிறகு மீண்ட தாம் பங்குச்சந்தை. அதெல்லாம் இருக்கட்டும் இதற்கு பேரே bulls and bears. பாயும் பதுங்கும். சரியாய் கணிக்க தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.


 பண வீக்கத்தை விட அமெரிக்காவில் விதிக்கும் வரிய கவலை அளிக்கிறது என்றால் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர் சொல்லுவது என்னவோ உண்மைதான் இந்த வரி உலகத்தையே தாக்கிக் கொண்டிருக்கிறது. எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. 


 தமிழகம் முழுவதும் மின் வாகனங்களுக்காக புது சார்ஜிங் மையம் அமைக்க மின்சார வாரியம் திட்டம். உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம்.

 சென்னையில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள அரசு நிலத்தை மீட்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. மதுரவாயில் வளசரவாக்கம் பகுதியில் தனியார் வசம் உள்ள பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் ஆகட்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடக்கம். தொடங்கட்டும். 


க்ரைம் காரனரில் கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற திருடர்கள் மேம்பால சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்களை போலீசார் கைது செய்தனர். விநாச காலே விபரீத புத்தி. சென்னை விரைவு ரயில் செல்போனை பறித்த இளைஞர் கைது. இதனால் என்ன தெரிகிறது என்றால் விமானமோ ரயிலோ நடந்தோ எப்படியோ பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு செயின் பறிப்பு ஒரு வழி. இது தான் சப்ளை செயின் என்கிறார்களோ.


 திடீரென்று தவெக தலைவர் நீட் விவகாரத்தில் திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். மேலும் கூறியதாவது 2026 தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று. ஒட்டு மொத்தத்தில் நீட் தேர்வு ஒரு பேசு பொருளாகி வருகிறது. அதற்குள் நம் தமிழாக மாணவர்கள் எல்லாவற்றிலும் டாப் ஸ்கோர் அடிப்பார்கள்.


 விருப்பம் போல் சோதனையை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது என்று டாஸ்மார்க் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதில் மேலும் ஒரு செய்தி என்னவென்றால் அமலாக்கத்துறை ஒன்றும் நீதியின் பாதுகாவலர் கிடையாது. தொடர்ந்து டாஸ்மார்க் வாதங்கள் நிறைவடையாததால் இந்த வழக்கு ஏப்ரல் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 வெளிநாட்டு செய்திகளில் நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என்று முன்னால் பிரதமர் ஹசீனா அவர்கள் தகவல். கேரளாவில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதரஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை. நல்ல தீர்ப்பு. அடுத்து மும்பை தாக்குதல் தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியா கடத்தல். இதைத் தொடர்ந்து ரஹாவூர் தானா மேல் முறையீடு செய்து தொடுத்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. செய்யாதா பின்னே. 


 மக்களின் கனவை நினைவாகியது முத்ரா திட்டம் என்றார் நமது பிரதமர். திட்டம் என்னவென்றால் நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும் கடின உடல் உழைப்பை பணியாக கொண்ட நபர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களை தொழில் முனைவோராக மாற்றி அவருடைய பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் கூறுகையில் வரவிருக்கும் காலங்களில் ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் கடன் கிடைக்கும் வகையில் வலுவான அமைப்பை மத்திய அரசு கொண்டு வரும் என்றார் அவர்.


 திருப்பதி காட்பாடி இடையே 1132 கோடி செலவில் இருவழிப்பாதை ரயில் பாதை. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


 17 ஆண்டுகள் பின்னோக்கி ட்ரம்ப் வரிவிதிப்பால் சீன நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. இந்த அதீத வரி விதிப்பால் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு பதட்டமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இதனால் சீனா இந்தியா உடனான எல்லை பதற்றங்களை குறைத்தது. ஜப்பான் கொரியா போன்ற அண்டை நாடுகளுடன் தனது உறவுகளை மேம்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.


அடுத்து அமெரிக்காவுக்கு சீனா 84% வரி விதித்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால் சில நாடுகள் எந்த அளவுக்கும் பணிந்து செல்ல தயாராக உள்ளன. வரி தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருங்கள் என்று என்னிடம் கெஞ்சுகின்றன என்று கூறினார் அதிபர் ட்ரம்ப். இது சரியான strategy. ஆனால் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.


 முத்தாய்ப்பாக வல்லுனர்கள் கூறுவது என்னவென்றால் ட்ரம்ப் அ வர்கள் விதிக்கும் வரி சீனாவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்கின்றனர். அவர்கள் கூறுவது என்னவென்றால் அமெரிக்காவை தவிர்த்து விட்டு பார்த்தால் இதனை விட பெரிய சந்தையாக பிற நாடுகள் இணைந்து பொருளாதார உறவை வளர்க்க முடியும் என்கின்றனர். நண்பன் எதிரியானால் நிம்மதி இருக்காது எதிரி நண்பனானால் நம்பிக்கை இருக்காது. இன்னும் ஒன்று சொல்லலாம் எதிரிக்கு எதிரி நண்பன். சில சமயம் இது போன்ற முடிவுகள் ஆபத்தில் கொண்டு விடும் என்பதை உணர வேண்டும்


-ஜெயந்தி சுந்தரம்