விமர்சனம்
பாகிஸ்தானின் 300க்கு மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதல். வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா. இதன் பின்னணி என்னவென்றால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பினை சோதிக்கும் நோக்கிலும், உளவு தகவல்களை சேகரிக்கும் நோக்கிலும் பாகிஸ்தான் இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விங்க் கமாண்டர் வியோமிக்கா அவர்கள் கூறுகையில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ராஜஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது ஆயுதமேந்தியா ட்ரோன்கள் ஏவப்பட்டன. அதில் ஒன்று பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்தது. அது வேண்டிய ட்ரோண்களை பயன்படுத்தி எல்லை கோட்டை கடந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்களுக்கு இழப்புகளும் காயங்களும் ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினரால் பாகிஸ்தானுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. மேலும் பாகிஸ்தான் 14 நகரங்களை குறிவைத்து தாக்கியது. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கும் வகையில் இந்தியாவும் முழு வீட்டில் செயல்பட்டு வருகிறது. நம் இந்தியர்கள் அனைவரிடமும் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் இருந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் மனதில் கவலையும் இருந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. ஜெய்ஹிந்த்.
தடையின்றி வங்கி சேவை வழங்க வேண்டும் என்று நமது மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் மக்களுக்கு நேரடியான சேவையும் டிஜிட்டல் மூலமான சேவையும்
கிடைக்க செய்வதோடு ஏடிஎம் மையங்களில் போதுமான அளவு பணம் இருக்க வேண்டும். Upi இணையதள சேவைகள் தங்கு தடை இன்றி வேலை செய்ய வேண்டும். அசாதாரணமான சூழல்களை சமாளிப்பது குறித்த முன்னெச்ச ரிக்கைக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எல்லைப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர். நல்ல விஷயம் தானே.
நாம் செல்லும் பாதை சிங்கப் பாதை என்று திருச்சியில் ஒரு விழாவில் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலேயே இது முதல் மாநிலமாக திகழ்கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில் கடந்த நான்காண்டுகளில் திமுகவின் செயல் செயல்பாடுகள் பிரமாண்டமாக இருக்கின்றன என்றார். திருச்சியில் திறந்த நூலகத்துக்குகாயிதே மில்லத் என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில சுவாரசியமான செய்திகளை பார்ப்போம்.
ராமநாதபுரத்தில் பாயமர படகு போட்டி நடைபெற்றது. சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடக்கிறது. வானவேடிக்கையுடன் தொடங்கிய போட்டியில் வீரர்கள் காட்டின் வேகத்துக்கு தகுந்தவாறு படகுகளை செலுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு அழுத்தம் தர வேண்டாம் என்று அன்பில் மகேஷ் கூறினார். பிளஸ் 2 ரிசல்ட் வந்த நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்றார் அவர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் 0.47% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
அடுத்த செய்தியில் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் முரளிநாயக் அவர்களுக்கு அன்பு மணி ராமதாஸ் அவர்கள் வீரவணக்கம் தெரிவித்தார். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றார் அவர். உண்மை தான்.
72 வது உலக அழகி போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
நல்ல விஷயம் தான்.
தயார் நிலையில் வ உ சி துறைமுக மூன்றாவது வடக்கு சரக்கு தளம். இது இரண்டு 120 டன் எடை இந்த நகரும் பளு தூக்கி இயந்திரங்களை பயன்படுத்துகிறது. துறைமுகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு இடங்களில் இருந்து 1500 டன் மொத்த சரக்குகளை அனுப்ப முடியும் என்று செய்தி குறித்து கூறுகிறது.
நலம் தரும் மருத்துவத்தில் கருவு ராமைக்கு காரணம் என்ன என்கிற விழிப்புணர்வு கட்டுரை அருமை. நல்ல விளக்கம்.
அரசியல் செய்திகளில் போர் சூழலில் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுக என்று இருக்கிறார் இபிஎஸ்.
ஆரூரில் சர்க்கரை ஆலை ஆய்வுக்காக வந்த அமைச்சரை அடுத்த வாக்குவாதம் செய்த இரண்டு அதிமுக எம்எல்ஏ கைது. எதற்கு தேவையில்லாத பிரச்சனை?
சண்டையை சட்ட சபையில் வைத்துக்கொள்வது போதாதா?
பொய்க்கு பொய்யே மருந்து என்கிற கதை சரியான பதிலடி. அருமை.
வாழ்ந்தே தீருவோம் திறந்த கதவுகள் கதை நன்றாகப் போகிறது.
எட்டு ஸ்தல விருக்ஷங்கள் இருக்கும் கோவில் படித்ததும் அதிசயமாக இருந்தது. அவை வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி மற்றும் அரசு வில்வம் என்றும் மேலும் இந்த கோவில் கும்பகோணத்தில் உள்ள திருவிசைநல்லூர் கோவில் என்பது மிக சிறப்பு. நிச்சயம் போய் பார்த்து விட வேண்டும்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் ருக்மணி லட்சுமிபதி அவர்களின் வரலாறு அருமை. குறிப்பாய் சென்னையில் உள்ள எழும்பூரில் இவருடைய பெயர் உள்ள சாலை இருக்கிறது.
கவிதைகள் வாசகர் கடிதம் நூல் விமர்சனம் அருமை.
பல்சுவை களஞ்சியத்தில் அனைத்து பகுதிகளும் அருமை. வாழ்வு தரும் ஆரோக்கியத்தில் வாத நோய் நீக்கும் பேரிக்காய் பற்றி படித்த பொழுது அதிசயமாக இருந்தது. மேலும் குங்குமப்பூவில் குவிந்திருக்கும் நன்மைகள் நல்ல கட்டுரை.
உலகச் செய்திகளில் பாகிஸ்தான் தனது பாவச் செயல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் சாடி உள்ளது. இன்னும் சண்டிகரில் சைரன் எச்சரிக்கை கொடுத்து மக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. ராணுவ வீரர்களுக்காக கர்நாடகாவில், கோவில் மசூதி ஆக இடங்களில் சிறப்பு பூஜை. ரயிலில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிப்பு இது நடந்தது திரிபுராவில். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தி வரும் நிலையில் எல்லா இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது செய்தி. தூத்துக்குடியில் முதியவரிடம் 44 லட்சம் பறித்த கும்பல் கைது. எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு.
விடுதலைப் படை தாக்குதல். பாகிஸ்தானின் பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் பதட்டம். இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே டி வான்ஸ் அறிவிப்பு. எதிரிகளால் பேரிழப்பு உலக வங்கியை நாடிய பாகிஸ்தான். அதிகமாக கடன் கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை சேர்ந்தவர் முதல் முதலாக போப்பாக தேர்வு. வாழ்த்துக்கள். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் சீனா சொல்வது என்ன? நிலைமையை சிக்கலாகும் நடவடிக்கையை இவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இவருடைய சமாதானம் அதிக ஆர்வம் காட்டுவதாக சீனா கூறியது. நல்லது. எப்படியோ போர் நின்றால் சரி. முதாய்ப்பாய் ஒரு செய்தி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. எது எப்படி ஆனாலும் மக்கள் விரும்புவது அமைதி. அது நடந்தால் போதும்.
-ஜெயந்தி சுந்தரம்