tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன்)-11.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன்)-11.05.25


665 வது நாளில் 28 லட்சம் வாசக சொந்தங்களோடு

வளர்ச்சிப் பாதையில் 

ஜெயக்கொடி நாட்டி வரும் தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

வெற்றி இலக்கான ஒரு கோடி வாசக சொந்தங்களை விரைவில் இணைத்து சொந்தம் கொண்டாடி மகிழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


போர் நிறுத்தம் அறிவித்த பின்பும் தொடரும் போர்.

மழை விட்டும் தூவானம் நின்ற பாடில்லை கதை தான்!

ஆனாலும் இந்த அளவுக்கு குறுகிய காலத்தில் தாக்குதல்கள் இரு தரப்பிலும் முடிவுக்கு வந்தது ஆறுதல்...

ஆரோக்கியம்...

ஆனந்தம்!

இந்த தருணத்தில் போரை விரும்பாத அனைத்து நாட்டுத் தலைவர்களும் தவறாமல் ஒன்றிணைந்து போரில்லா உலகம் மலர்வதற்கு வழி வகை காண வேண்டும். மனித நாகரீகத்தின் உச்சமாகக் கருதப்படும் போரை முற்றிலும் ஒழித்திட தலைவர்கள் முனைப்புடன் செயல் பட்டால் போதும்... வெற்றி எட்டி விடும் தூரம்தான்!

போர் இல்லாத 

போர் அச்சம் இல்லாத 

போர்த்தளவாடம் இல்லாத 

புதிய பூமி மலரட்டும்!


இந்த உன்னத நோக்கத்திற்காக எல்லோரும் தினசரி ஒரே ஒரு நிமிஷம் ஒதுக்கி போரில்லா உலகுக்காக உள்ளன்புடன் பிரார்த்தனை புரிய

வேண்டும். காரணம்..

கூட்டுப் பிரார்த்தனை க்கு அத்தகைய மாபெரும் சக்தி உண்டு...உண்டு.. உண்டு.


ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் 

தலைமையில் தேசியக் கொடி பேரணி -- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

உலகம் முழுவதும் ஊருலக ஆட்சியின் கீழ் கொண்டு வரப் பட்டால், தேசப் பற்று என்கிற பெயரில் பிற நாடுகள் மீது உண்டாகும் பகைமை உணர்வுக்கு இடமில்லாமல் போகும் அல்லவா? கூடவே அளவுக்கு அதிகமாக ராணுவ பட்ஜெட்டுக்கு அனாவசியமாக ஒதுக்கி அல்லல் பட வேண்டிய அவஸ்தை யும் இல்லாமல் போய் விடும் அல்லவா?

போர் அச்சமே இல்லாத நிலையில் 

பூமியெங்கும் பூரணமான சுபிட்சம் 

தழைத்தோங்கி செழிக்குமே...ஏன் உலகமெங்கும் பாலாறும் தேனாறும் 

ஓடும் அதிசயம் கூட 

நிகழ்ந்தாலும் நிகழுமே...

ஆகவே இந்த புதிய சிந்தனையை அனைவரும் உள் வாங்கி அவரவர் பங்குக்கு சற்று சிரத்தை மேற்கொண்டு செயல் பட்டால் போரில்லா புதிய பூமியை இங்கே நிச்சயம் சாத்தியம் ஆக்கலாம்...

இன்னும் சரியாக சொன்னால் இது காலத்தின் கட்டாயமும் கூட...


நலம் தரும் மருத்துவம் பகுதியில் புற்றுநோய் க்கு மருந்தாகிறதா காளான் -- புதிய கண்டுபிடிப்பு.

பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

இதைப் புரிந்து கொண்டு வாசகப் பெருமக்களின் நல வாழ்வுக்காக நித்தம் நித்தம் ஆரோக்கியம் பேணும் அற்புத விஷயங்களை அளித்து வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்திற்கு என்றென்றும் நன்றி!

சுடச்சுட அரசியல் சம்பந்தமான சுவை மிகு செய்திகள்...

சிந்தனையை சிறப்பாக்கும் செம்மையான ஆன்மீக செய்திகள்...

இதயத்தை பண்படுத்தும் ஏற்றமிகு இலக்கிய படைப்புகள் என்று தமிழ் நாடு இ பேப்பரின் விசால - வெளிச்சப் பார்வையால் வாசகப் பெருமக்களுக்கு தினந்தோறும் கிடைக்கும் பல்சுவை விருந்து பாராட்டுக் குரியது மட்டுமல்ல...

நினைந்து நினைந்து 

பரவசப் பெருமை கொள்ளத் தக்கதும் தான்... 


வாழ்க வையகம் 

வாழ்க வளமுடன் 

வாழ்க நலமுடன் 



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்