தமிழ் நாடு இ பேப்பர் நித்தம் நித்தம் புதுப்புது பொலிவுடன் ஜொலித்து வருவது
சக்தியோடு சந்தோஷத்தையும் அளிக்கிறது.
சபாஷ்... சபாஷ்!
முதன்மை தலைப்புச் செய்தியாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 266--வது
போப் பிரான்சிஸ் காலமானதை வெளியிட்டு முக்கியத்துவம் அளித்தது சிறப்பு.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி விருந்தளித்த சுவையான செய்தி புகைப்படத்துடன் சுவாரஸ்யங்களுடன் பதிவாகி இருந்தது
பசுமை...பசுமை!
சட்டசபையில் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவரும் காரசாரமாக விவாதம் புரிந்ததை, வரி விடாமல் படிக்கத் தூண்டும் விதத்தில் வெளியிட்டிருந்தது, அரசியல் ஆர்வலருக்கு அற்புத விருந்து.
உலக பூமி தினத்தை மறவாமல் வாசக உலகுக்கு நினைவுப் படுத்தி விழிப்புணர்வு ஊட்டிய, தமிழ் நாடு இ
பேப்பரின் சமூக நல சிந்தனைக்கு ஜே ஜே!
எட்டு மத்திய மந்திரிகள் பதவிப் பறிப்பு பற்றிய ஊகச் செய்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நேர்த்தி இன்றைய அரசியல் சூழலில் மிகவும் கவனிக்கத் தக்கது.
அமெரிக்கா -- சீனா வர்த்தக வரி விதிப்புப்
போர், மழை விட்டும் தூவானம் நிற்காத கதை தான் என்று கூட சொல்ல முடியாது. அதி வேகம் எடுக்கிற மாதிரி தொடர்கிறது.
இதை உறுதிப் படுத்தும வகையில்
எங்கள் நலனுக்கு எதிராக அமெரிக்கா வுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எவரையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று சீனா அதிரடியாக முழங்கி இருப்பதை வெகு அழகாக செய்தி ஆக்கி இருப்பது அருமை...அருமை...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10- ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்கள் கைது பற்றிய செய்தியை அம்பலப் படுத்தி மாணவ சமுதாயத்துக்கு நுட்பமாக பாடம் உணர்த்தி இருந்தது மெச்சத் தகுந்தது.
விண்வெளியில் செயற்கை கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறிய முக்கிய கருத்துக்களை கச்சிதமாக பதிவு செய்திருந்தது வரவேற்கத் தக்கது.
அரசியல் களத்தில்
த.வெ.க.வின் ' சுறுசுறு'
வை வெளிப் படுத்தும் வகையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த வெளியிட்டுள்ள பூத் கமிட்டி பற்றிய விளக்கம் ஜோர்...ஜோர்!
தமிழகத்தில் சாதிய பாகுபாடு தலை விரித்தாடுகிறது என்று தமிழிசை ஆவேசமாக கொந்தளித் திருப்பதை கனம் குறையாமல் கண்ணியம் குறையாமல் வெளியிட்டிருந்தது மெச்சத்தக்கது.
மெட்ரோ செய்தியையும் புறந்தள்ளி விடாமல்
பூந்தமல்லி -- போரூர் ஒரு வழிப் பாதையில் ஏப்ரல் --30 க்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நியூஸ்... சென்னை மக்களுக்கு சந்தேகமில்லாமல் சந்தோஷம் அளிக்கும் செய்தி.
தமிழக ஆளுநர் பற்றிய சர்ச்சை சூடு இல்லை அனல் இன்னும் தணியாத சூழலிலும், கவர்னர் மாளிகை சார்பில் துணை வேந்தர்கள் மாநாடு தீவிரமாமே...
என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ? திக் திக் திக்...தருணங்கள்!
கல்குவாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. முதல்வருக்கு சங்கத்தின் தலைவர் கடிதம் பிரசுரம். அதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தத்தால்
90 லட்சம் பேர் பாதிப்பு
என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அக்கறைக் கவலையுடன் கருத்து சொல்லியிருக்கிறார்.
கவனிக்கப் பட வேண்டிய விஷயம்தான்!
நிரஞ்சனாவின் யாதுமாகிநின்றவள்
என்றென்றும் நினைவில் நிற்கும் தனித்துவம் மிக்க தகுதியான படைப்பு.
கங்கிராட்ஸ்!
அரும்பூர் க.குமாரகுருவின் 'முற்பகல் செய்யின் '
சிறுகதை அழகான கருத்தை அற்புதமாக சித்தரித்திருந்தது.
11 தலைமுறைக்கான பலனை அள்ளித் தரும்
அட்சய திருதியை கட்டுரை நெஞ்சம் அள்ளியது. அட்டகாசம்!
நித்தம் எகிரும் தங்கத்தின் விலையை எண்ணும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.
தினம் ஒரு தலைவர்கள் தலைப்பில் தினசரி வரும் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு பொக்கிஷம் என்றால் மிகையில்லை.
பெ.வரதராஜுலு நாயுடு கட்டுரை மிகவும் சிறப்பு.
சினிமா செய்திகள் வழக்கம் போல் சுவாரஸ்யம் குன்றாமல் தித்திக்கின்றன.
கவிதைகள் நெஞ்சம் அள்ளி நவரச உணர்வுகளை ஊட்டி வியத்தகு உள் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன.
உண்மை இது.வெறும்
புகழ்ச்சி இல்லை.
வாசகர் விமர்சனங்கள் நெற்றிக்கண் பார்வையில் நயம் செழிக்க மிளிர்கின்றன.
மீம்ஸ், ஜோக்ஸ் திகட்டா தேனமுதமாக
உவட்டா இன்பம் அளிக்கிறது.
இன்னும் அள்ள அள்ளக் குறையாத அமிர்த சுரபியான தமிழ்நாடு இ பேப்பர்
செழித்துப் பரவி சுவை யூட்டி சொர்க்க வாசல் திறக்கின்றன.
தொடர்க தமிழ்நாடு இ பேப்பரின் இந்த அரிய அற்புத நற்பணி!
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்
தென்காசி மாவட்டம்