tamilnadu epaper

அம்மா உன் வயிற்றினிலே.....

அம்மா உன் வயிற்றினிலே.....


பரிசோதனைக்காக 

மருத்துவர் கவனிப்பில் இருந்தாள் வளர்மதி


பரிசோதனை முடிந்ததும் வளர்மதி யின் கணவர் வருணை அழைத்தார் மருத்துவர் 


மூன்று நாளைக்குள் குழந்தை பிறந்திடும் வலி வந்ததும் அழைச்சுட்டு வாங்க 

அம்மா நீங்க வேலைகள் பாருங்க 

நடைபயிற்சி செய்யுங்க சத்தான சாப்பாடு சாப்பிடுங்க

தண்ணீர் அதிகமா குடிங்க என்று மருத்துவர் சொன்னதை கேட்ட வருண் 


மூன்று நாள் தானே வளரை இன்னைக்கே சேர்த்துக்கங்க என்று கேட்டான் 

இன்று சிலரை அனுப்பிய பின் தான் சேர்க்க முடியும் நாளைக்கு நாங்களே கூப்பிடுவோம் என மருத்துவர் சொல்லவும் 


சரிங்கம்மா எனச் சொல்லி வளரை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையை விட்டு வெளியே வந்து அருகில் நின்ற ஆட்டோவில் ஏறி போகும் இடத்தைச் சொன்னான் வருண் 


எதுவுமே தயார் பண்ணாமே நீங்க பாட்டுக்கு இன்னைக்கே சேர்த்துக்கச் சொல்றிங்க 


வளரு அலையாம கொள்ளாம ரெஸ்ட் எடுப்பில்லே அதுக்குத் தான் கேட்டேன் 

தல பிரசவம் உங்க அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காம மருத்துவ மனையிலேயே உன்னை தங்க வைக்கலாமுன்னு நினச்சே ன்னு சொன்னான் வருண் 


ஆட்டோ மெயின் சாலையில் அப்படியே நின்றது கட்சிக்காரர் கல்யாணமாம் அதான் வண்டிகள் அதிகம் 


வண்டியின் வரிசையைப் பார்த்த ஆட்டோக்காரர் வண்டியை அருகே இருந்த சந்தில் நுழைந்து மாற்றுப் பாதையில் சென்று 

மெயின் சாலைக்கு திரும்பும் முன் பயங்கரமான வெடிச் சத்தம் சுற்றும் முற்றும் பார்த்த ஆட்டோக்காரர் மெயின் சாலையில் குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் டயர் வெடித்த சத்தம்


பேருந்தில் இருந்த பயணிகள் அலறிய சத்தம் ஆட்டோவில் இருந்த வளர்மதியும் திடுக்கிட வயிற்றில் இருந்த சிசுவிற்கும் அதிர்வலைகளால் வயிறும் சற்று குலுங்கியதை உணர்ந்தாள் 


இடை இடையே ஆட்டோவும் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிச் செல்ல வருண் பயந்தான் மூன்று நாளில் பிறக்கப் போகும் குழந்தை இன்னிக்கே பிறந்திடுமோ என்ற அச்சத்தில் வளரைப் பார்த்தான் 


வளர்மதி வயிற்றை பிடித்தபடி கைகளை வைத்திருந்தாள் 

வளரு என்ன வயிரு

வலிக்குதா திரும்பி மருத்துவ மனைக்கு 

போவோமா..என கேட்டான் 


இல்லேங்க வீட்டுக்கு போவோம் என்றாள் 


நேர்வழியில் வரவேண்டிய ஆட்டோ தெருவெல்லாம் சுற்றி வந்தது 

ஆட்டோக்காரர் கேட்ட 

பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்தவள்

சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் வளர்மதி


வளரு நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடு நா கடைவீதி வரை போய்ட்டு வர்றேன்னு சொல்லிச் சென்றான் 


டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள் மெதுவா வயிற்றை தடவிக்கொண்டே உங்களுக்கு எதுவும் ஆகலையே அம்மா பேசுறது கேட்குதா..

என வயிற்றில் கை வைத்தபடி கேட்டாள் 

சிறு அசைவை உணர்ந்தவள் சற்று கண்ணை முடிக்கொண்டு அமைதியானாள் 


அம்மா..... அம்மா.... எனச் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் யாரு யாரு 

எனக் கேட்டுக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள் 


எந்த சத்தமும் இல்லாத அமைதி நிலவியது 

அம்மா....அம்மா என் மறுபடியும் அதே குரல் 


வளர்மதி பதட்டப் படாம அம்மாவ யாரு கூப்பிட்டது அம்மா பேசுறேன் நீங்க எங்கே இருக்கீங்க என பதில் குரல் கொடுக்கவும் 


உன் வயிற்றில் இருந்து அழைக்கிறேன் அம்மா என்ற குரல் கேட்டு 

என்ன என் வயிற்றில் இருந்தா என்று மூச்சு வாங்க அம்மாடி என் குழந்தையா.....


நல்லா இருக்கியா எனக் கேட்டாள்


எங்கே போயிட்டு வர்றிங்க 


மருத்துவமனைக்கு போயிட்டு வர்றோம் 


எதுக்கு....


நீ நல்லா இருக்கியன்னு பரிசோதிச்சுட்டு வர்றோம்  

அங்கே கொடுத்த மருந்து என்னை என்னமோ செய்யுது


 என்ன செய்யுது சொல்லுகண்ணு 


எனக்குத் தெரியல 


அப்பிடியா அப்பா இப்போ வந்துருவாரு 

வந்தும் உனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கச் சொல்றேன் 


ஏதோ அதிர்ச்சியான சத்தம் கேட்டதே 


அதுவா பேருந்து சக்கரத்தில் உள்ள காற்று வெடிச்சு வெளியே வந்த சத்தம் கண்ணு 


குலுங்கி குலுங்கி போனதென்ன


 அதுவா ஆட்டோ 


அங்கே எப்படி இருக்கு 


இரவு பகல்ன்னு இரண்டு பகல்ல கதிரவன் வெளிச்சத்தால் நாம் என்னென்ன செய்யனுமோ செய்து கொள்ளலாம் இரவில் வண்ண வண்ண விளக்கொளியில் இருக்கலாம் 


யாரு யாரு இருக்கீங்க 


உன் அப்பா தாத்தா பாட்டி அப்புறம் நீங்க 


அக்கா அக்கா என அழைக்கிற குரல் கேட்டு யாரோ கூப்புறாங்க யாருன்னு பார்த்திட்டு வர்றேன் எனச் சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்துவ வாசலை நோக்கி போனாள்

கதவை திறந்தாள் 

ஒரு பெண்மணி நின்றிருந்தாள் 


என்னம்மா யார் வேணும் எனக் கேட்டாள் 


அக்கா அனாதை ஆசிரமத்தில் இருந்து 

வர்றோம் 


பழைய துணிகள் மணிகள் இருந்தாள் கொடுங்கம்மா எனக் கேட்டாள் 


கொஞ்சம் இருங்க வர்றேன் எனச் சொல்லி உள்ளே வந்தாள் அலமாரியை திறந்து நூறு ரூபாய் எடுத்து வந்து இந்தாங்க. இத வச்சுக்கோங்க எனச் சொல்லி அனுப்பி விட்டு வந்த வளர்மதி சேரில் சாய்ந்தாள் 


கண்ணு அம்மா வந்துட்டேன் பேசலாமா...


வேற யாரும் மா இருக்காங்க 


மாமா அத்தை சித்தி சித்தப்பா இருக்காங்க 


இப்போ யாரும்மா வந்தது 


அவங்களா அனாதை ஆசிரமத்தில் இருந்து பிள்ளைகளுக்கு துணி கேட்டு வந்தாங்க 


நீங்க கொடுக்கலையா 


சின்னப் பிள்ளைகள் இங்கே இல்லையே இனிமே நீங்கள் வந்தாத்தேன் 

பழைய துணியை கொடுத்து மேலும் அவங்கல கஷ்டத்தில் அல்லல்படக் கூடாதுன்னு தான் பணம் கொடுத்தேன் 


பணமா அப்பிடின்னா என்னா...


நமக்கு வேண்டிய பொருளை வாங்குவதற்கு உதவும் பொருள் 


அது எங்கிருந்து வருது 


அரசாங்கம் தயார் பண்ணி மக்கள் பயன் பாட்டிற்கு கொடுப்பாங்க 

உங்க அப்பா வேல பார்க்கிறதுக்கு 

கூலியா பணம் கொடுப்பாங்க அத வாங்கி வந்து நமக்கு என்ன தேவையோ வாங்கிக் கொள்ளலாம் 


அம்மா உள்ளே இருந்து வெளியே வரவே பிடிக்கலே 


ஏ கண்ணு இப்பேவே அறிவா பேசுறியே நீ வெளி உலகிற்கு வந்தா உனக்குன்னு ஒரு உலகை உருவாக்கலாம் 


நீங்க என்னென்னமோ சொல்றிங்க என்னாலே எதையும் ஏத்துக்க முடியலே 

அதனாலே நா வரமாட்டேன்னு சொல்ல 

வளருக்கு வயிற்றில் சுருக்கென வலி எடுக்க ஆ....அம்மா... என முனங்கினாள் 

அப்போது வருண் கதவை திறந்து உள்ளே வந்தான்


என்னங்க என் வயிற்றில் இருந்த குழந்தை என்னோட பேசுச்சுங்க 


என்ன வளரு சொல்றே குழந்தை பேசுச்சா 


ஆமாங்க  


அசந்து தூங்கும் போது குழந்தையை பற்றி நினச்சுருப்பே 


இல்லேங்க ஆ... வலிக்குதே அம்மா என கத்தினாள் வளர்மதி 


வலி தாங்க முடியலங்க என கத்தவும் 


 வருண் வெளியே சென்று ஆட்டோ வருதா என பார்த்தான்  

இரண்டு நபரை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வருவதைப் பார்த்ததும் கை நீட்டினான் 

அருகில் வந்ததும் சவாரி இருக்கு சார் என்று ஆட்டோக்காரர் சொல்லவும் 


அண்ணே என் மனைவி பிரசவ வலியால் கத்துகிறாள் என்றதும் 


உள்ளே இருந்தவர்களைப் பார்த்தான் 

உள்ளே இருந்த பெண்ணிடம் சொல்ல அந்தப் பெண் 


நான் நர்சு தா வாங்க பாப்போம் எனச் சொல்லி வாங்க பார்க்கலாம் என்றவுடன் 

வருண் பின்னாடியே சென்றனர்

வளர்மதி வயிற்றைப் பிடித்து அலறி கத்திக் கொண்டு இருந்தாள்


 இதைப் பார்த்த நர்ஸ் வளர்மதி அருகில் சென்று பார்த்தாள் முன் வயிற்றிலிருந்து குழந்தை இறங்கி இருப்பதைப் பார்த்தவள்


 கொஞ்சம் சுடுதண்ணீர் கொண்டு வாங்க எனச் சொல்லி விட்டு 

வயிற்றின் அடிப்பகுதியைப் பார்த்தாள் 


தலை மெதுவா வெளியே வந்து கொண்டிருந்தது நர்சுக்கு ஆச்சரியம் 


வயிற்றுப் பகுதியை அழுத்த அழுத்த குழந்தை வெளி வரும் தாய் கத்தக் கத்த குழந்தை தானா வெளியே வந்ததைப் பார்த்து மெதுவா கையில் வாங்கி இழுத்தாள் கை கால் எல்லாம் வெளியே வரவும் 

முழுவதுமாக குழந்தை வந்ததைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது

 

பிறந்தது பெண் குழந்தை

குழந்தையின் முகம் உடலெல்லாம் வட்ட வட்டமாய் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது ஆனால் இறந்து போயிருக்கிறது கத்தியால் தொப்புள் கொடியை அறுத்து விட்டு

அந்த நேரத்தில் சுடு தண்ணீருடன் வருண் 

வந்தான் சுடு தண்ணீரைக் கொண்டு கழுவினாள் நர்ஸ் படுக்கை விரிப்பில் குழந்தையை வைத்தவள் வேக மாக மருந்தும் ஊசி எழுதி வருணிடம் கொடுத்து சிக்கிரம் வாங்கிட்டு வாங்க என்றாள் நர்ஸ் 

வளர்மதி அலறலை நிறுத்தாமல் இருக்க


 வளர்மதி அருகே வந்த நர்ஸ் வயிற்றுப் பகுதி பரிசோதித்தார் 

வயிற்றை அழுத்தினாள் மறுபடியும் ஒரு குழந்தை குழந்தை வர வர வலியால் துடித்தாள் வளர்மதி

குழந்தையை முழுவதும் எடுத்து சுடு தண்ணீரில் கழுவ குழந்தை வீரிட்டு கத்தியது படுக்கையில் வைத்து கைகளை கழுவினாள் நர்ஸ் 


 வருண் மருந்துடன் வரவும் மருந்தை வாங்கி வளர்மதிக்கு செலுத்தினாள் நர்ஸ் 


உங்களுக்கு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது பெண் குழந்தை இறந்து பிறந்திருக்கிறது என்று சொல்ல வருண் குழந்தையைப் பார்த்தான் 


நர்சம்மா குழந்தைக்கு என்ன இப்பிடி இருக்கிறது 


கெமிக்கல்ஸ் சேராம குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே அவசர ஊர்திக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரச் சொல்லிக் கொண்டு இருக்க 

சற்று அமைதியாக இருந்த வளர்மதி கண் விழித்தாள்  

என் குழந்த எனக் கேட்க 

நர்ஸ் ஆண் குழந்தையை எடுத்து வளர்மதி யின் பக்கத்தில் படுக்க வைத்தாள்  


முதல்ல பிறந்த குழந்தை எங்கே எனக் கேட்டாள் வளர்மதி 


அது வந்தும்மா.....

இறந்து பிறந்திருக்கு என்று சொல்ல 


என்னுடன் பேசிய குழந்தை அது நான் பார்க்கனும் என்று அழுதாள் 


 இறந்த குழந்தையை வாங்கிய வளர்மதி என் கண்ணு அம்மா கிட்டே வர மாட்டேன்னு சொன்னியே கண்ணு என நெற்றியில் முத்தம் கொடுத்தபடி அணைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் 


என்னை விட்டுட்டு போயிட்டியே தாயீ என அழுதவளிடம் இருந்து குழந்தையை வாங்கிய நர்ஸ் ஆம்புலன்ஸ் வந்து விட்டது எனச் சொல்லிக் கொண்டே  

வாம்மா மருத்துவமனைக்கு போகலாம் என்று வளர்மதியை அழைத்தாள் நர்ஸ் 



-நல.ஞானபண்டிதன் 

திருப்புவனம் புதூர்