tamilnadu epaper

வியர்வையில் விளைந்த வியனுலகம்

வியர்வையில் விளைந்த வியனுலகம்


உழைப்பின் பெருமை

உழைத்திட்டால் நன்மை 


சோம்பலை விடுத்து

சோர்வை அகற்று


தொழிலில் அக்கறை

தொடர்ந்திட தெரியும் கரை


ஈடுபாடுடன் பணியாற்று 

ஈரமாகட்டும் மேனியது


ஊக்கத்துடன் செயலாற்றி உன்னதத்தால் உயர்ந்திடு 


உழைப்பு 

உனதாகிட

எதுவும் எளிதாகும் 


தன்னம்பிக்கை உன்னுள் எந்நாளும் இருந்திடட்டும் 


வாழ்வும் வளமாகிட 

வசந்தம் தேடிவரும் 


இளமையில் பாடுபடு

ஓய்வெடுப்பாய் முதுமையிலே


கருத்தாய் உழைத்திடு

எண்ணமது நிறைவேறும்


*வியர்வையில் விளைந்த வியனுலகம்*


எத்தொழிலும் இழிவில்லை உணர்ந்தே வாழ்ந்திடு 


வியர்வைத் துளிகள் வெற்றியின் இரகசியமே


உணர்ந்தால் ஆனந்தம் உண்டாகிடும் உனக்குள்ளே


உலகமும் வியக்கும் 

உண்மையாய் நேசிக்கும் 


வேலையே வேதமாகும் 

வேறொன்றும் இதற்கு ஈடில்லையே


-பெ.வெங்கட லட்சுமி காந்தன் விருதுநகர்