tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-12.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-12.04.25

வணக்கம்


     12.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


    அதிமுக பாஜக வரும் தேர்தலுக்காக தற்போதே கூட்டணி அமைத்து களம் காண இருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்பது மறுபடியும் உறுதியாகியிருக்கிறது.


  மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் மூத்த தலைவர் துரை முருகன். எப்போதும் வார்த்தைகளை விடும் முன் சற்று யோசிக்க வேண்டும். வார்த்தைகளை வீசினால் அள்ள முடியாது என்று பெரியவர்கள் சொல்வர்.


  பாஜக தலைவராகும் எங்கள் நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.


  கிரிண்டர் செயலியைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்துவதாக கண்டறிந்த காவல்துறை தமிழக அரசுக்கு அச்செயலியை தடை செய்ய கோரிக்கை வைத்திருக்கிறது. அரசு உடனே செய்ய வேண்டிய ஒன்று.


  சித்திரையின் சிறப்புகள் கட்டுரை வரும் சித்திரையை வரவேற்கும் விதமாக அமைந்திருந்தது.


  நீலகண்ட பிரம்மச்சாரி குறித்த கட்டுரை சமீபத்தில்தான் வெளி வந்திருந்தது. இவ்வாறு குறுகிய காலத்திற்குள் மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்கலாம்.


  வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதி கட்டுரைகள் சிறப்பு. குறிப்பாக பேரிக்காய் வாதநோய்களைக் குணப்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய செய்தி.


  போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை பணிமிடமாறுதல் செய்வதைக் கண்டித்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.


  தூக்கத்தைத் தொலைத்து இரவுப்பணி பார்ப்பவர்களுக்கு இதயநோய் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவித்திருப்பதை இரவுப்பணியில் பணியமர்த்தி இருப்போர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


  உலகம் முழுவதும் விரைவில் வறட்சியைச் சந்திக்கும் என்கிற பாபா வங்காவின் கணிப்பை புறந்தள்ளாது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தவிர்க்க முனைய வேண்டும்.



தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )