tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-14.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-14.04.25

வணக்கம்


     14.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


  ஏப்ரல்17 வரை வெப்ப அலை வீசக்கூடும் என்கிற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மனதில் கொண்டு வீணான அலைச்சலைத் தவிர்த்து தேவையான நீரைப்பருகி தற்காத்துக் கொள்வோம்.


    மாணவர்களின் ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறையை பாராட்டிய மத்திய அரசுக்கு நன்றி. இத்தகைய சிறப்பான சேவையை மேற்கொண்ட ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி.


 தமிழகத்தில் நம்பர்1 மற்றும் தேசிய அளவில் 14 வது இடத்தில் இருக்கும் தஞ்சை மாநகராட்சிக்கு வாழ்த்துகள்.


   செல்போன் கதிர்வீச்சானது உடல் செல் திசுக்களை சூடாக்கும் என்றும் மேலும் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மின்காந்த அலைகளும் கதிரியக்கங்களும் அபாயகரமானவை என்று தேசிய சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியதை கருத்தில் கொண்டு செல்போன் டவர்களை குடியிருப்புகளின் மீது அமைப்பதை தவிர்க்க வேண்டும்.


  சித்திரையின் மகத்துவத்தைத் தந்தது வாழ்வைச் சீராக்கும் சித்திரை. சித்திரை போற்றுதும். 

  

  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் ஏப்ரல் 14ல் பிறந்த பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய கட்டுரை அன்னாருக்கு பெருமை சேர்த்தது. சமத்துவம் சகோதரத்துவம் மனிதநேயத்திற்கு சான்றாக விளங்கிய அவரது கொள்கைகளை நாம் ஏற்று அதன்படி நடப்போம்.


  சித்திரை என்றால். வேப்பம்பூ பச்சடி. அதை மீட்டுத்தந்து எவ்வாறு வைப்பது என்பதையும் எடுத்துக் கூறிய நம் தமிழ்நாடு இ பேப்பர். காமிற்கு நன்றி


-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )