வணக்கம்
20.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
தேசிய நாட்காட்டி தினம் இன்று ஏப்ரல் 20ம்தேதி கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வோடு இணைந்த ஒன்றுக்கென அமைந்த நாளில் அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
சென்னை முதல் ஏசி ரயில் கட்டணம் கோடைக்காலச் சூரியனைப் போல் சுட்டெரிக்கிறது. போகப்போகத்தான் வரவேற்பு எப்படி இருக்கும் எனச்சொல்ல.இயலும்.
கோவை சரவணம்பட்டி ஷாஷகான் நகர் அரசு நடுநிலைப்பள்ளி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது. பாராட்டி மகிழ்வோம்.
ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பை பகிர்ந்த கட்டுரையில் தன்னுடைய அன்புச் சீடனான தாமஸிடம் தன்னுடைய காயங்களைக் காட்டி, தழும்புகளைத் தடவச் சொல்லி நம்பிக்கை விதையை ஊன்றியவர் தேவகுமாரன். அந்த நம்பிக்கையின் உயிர்ப்பே ஈஸ்டர்.பண்டிகை.
பி.எஸ். ராமையா குறித்த கட்டுரை மிகச்சமீபத்தில்தான் நமது இதழில் பிரசுரமாகி இருந்தது. மீண்டும் பதிவு என்பது சலிப்பைத் தரக்கூடும்.
கருப்பு திராட்சையின் மருத்துவ குணம், முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் அவசியமா கட்டுரைகள்.
உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி நீலகிரி ரயிலைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )