tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-14.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-14.04.25


வணக்கம்!

கட்சிக்கு யார் தலைவர்

என்பதில் பாமகவில் அப்பாவுக்கும் மகனுக்கும்

இடையே பிரச்சினை

வெடித்து இருக்கிறது. இருவருமே தாங்கள்தான்

கட்சிக்கு தலைவர் என்கிறார்கள்.


 வரப்போகும் சட்டமன்ற

தேர்தல்களில்  கூட்டணி

பேச்சு வார்த்தை நடத்த வசதியாக கட்சிக்கு

தான் தலைவராக இருப்பது

நல்லது என்று நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் நினைக்கிறார்

போல இருக்கிறது.


புதிதாக சட்டமாக்கப்பட்ட

மசோதாவின்படி தமிழகத்தின் அனைத்து

பல்கலைக்கழகங்களுக்கும்

முதலமைச்சரே வேந்தர் ஆகிறார். 


துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை

கூட்டத்தை ஏற்பாடு  செய்து இருக்கிறார் முதலமைச்சர்.

புதிதாக நியமனம் செய்யும்

துணை வேந்தர்களை தகுதி வாய்ந்தவர்களாக நியமிக்க வேண்டும். அதில் அரசியல் கலப்பு இருந்தால் அரசுக்கு

அவப்பெயர் ஏற்படும்.


உரிமைகளை பெறுவதை விட அவற்றை சிறந்த முறையில் காப்பாற்றுவது தான் சிரமமான காரியம்.


தமிழகத்தின் நம்பர் ஒன் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தேசிய அளவில் 14 வது இடத்தை பிடித்திருக்கிறது. தஞ்சாவூர் காரன் என்ற முறையில் நானும் பெருமைப்படுகிறேன்.


வெப்ப அலையை எதிர்கொள்வதற்காக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வரும் நிலையில் இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்துவதில் பயனில்லை.


வெப்பமடைதல் பற்றியும் சுற்று சூழல் மேம்பாடு பற்றியும் ஓசோனில் ஓட்டை விழுந்திருப்பது பற்றியும் ஒவ்வொரு தனி மனிதனும் கவலைப்பட வேண்டும். அவற்றை சரி செய்வதற்கான செயல்களில் இறங்க வேண்டும்.


கோவையை சுற்றியுள்ள இடங்களில் பார்த்தே ஆக வேண்டிய இடங்களை கடந்த சில தினங்களாக தொடராக எழுதி வந்தது அருமை.


-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்