முகில் தினகரன் எழுதிய "பந்தியில் ஒரு பாதகன்"படித்தேன். இலையில் நிறைய வாங்கி எச்சில் இலையாகப் போடுவதை விட, அது போன்றவர்களை பாத்திரத்தோடு வரச்சொல்லி மீந்த உணவுகளைத் தரலாமே அது சுகாதாரமாகவும் இருக்கும் எனத் தோன்றியது.
நாகநாதன் கோபாலன் எழுதிய " பிச்சைக்காரி" வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுத்தாலும் நகையை ரஞ்சனியிடம் ஒப்படைத்த நேர்மை பாராட்டத்தக்கது. ஆண்டவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமாய் நகைகள் அணிவது தேவையா?
-ஸ்ரீகாந்த்
திருச்சி