பழம் வாங்க வந்த பெரியவர்களிடம் , பணத்தை வீட்டில் வைத்தால் கொள்ளை அடித்து ," />
"பழம் வாங்க வந்த பெரியவர்களிடம் , பணத்தை வீட்டில் வைத்தால் கொள்ளை அடித்து , திருடி விட்டு ஓடி விடுகின்றனர் . பாங்கில் வைத்தால் சைபர் க்ரைம் மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர் என்றார் மெதுவாக பழக்கடை மாரிமுத்து .."
பணத்தை சேர்த்தாலும் கஷ்ட்டம் , சேர்த்த பணத்தை இழந்தாலும் கஷ்ட்டம் .
எங்க தாத்தா எங்கப்பா வாழ்ந்த காலம் பொற்க்காலம் . நேர்மையான அரசியல்வாதி , நம்பிக்கையான மக்கள் . ஆரோக்கியமான உணவு , மகிழ்ச்சியான உறவு .
கூட்டுக் குடும்ப இன்பம் , கடுமையான உடல் உழைப்பு , படுத்தால் தூங்கும் கொடுப்பினை . இன்னும் எத்தனையோ என்றார் மாரிமுத்து .
பழைய புராணத்தை ஆரம்பிச்சாச்சா என்றாள் சத்தமாக ராணி .
அதற்குள் வயதான பெரியவர்களிடம் பேசியவாறு ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் செய்தார் மாரிமுத்து .
அடுத்து பகுத்தறிவு வளர்ந்துடிச்சு , படிச்சவங்க கூட்டம் பெருகிடிச்சு , பேங்க் லோன் ஈசியா போயிடிச்சு , எதையும் இந்த இடத்துலேயே வாங்கும் விஞ்ஞான உலகம் , எங்க அப்பா தாத்தாவுக்கு கிடைக்கலை என்றார் மாரிமுத்து .. "
இளைஞர்கள் கூட்டம் பேச்சைக் கேட்டவாறு இரண்டாயிரத்துக்கு பழம் வாங்கி சென்றது .
வாய் ஓயுதா பாரு இந்த மனுஷனுக்கு என்று கத்தியபடி டீயைக் கொடுத்தாள் ராணி . பதில் எதுவும் சொல்லாமல் வாங்கிக் குடித்தார் மாரிமுத்து .
நாளைக்கு வெளியூர் போகனும் ராணி நீ பழக்கடையை பார்த்துக்கோ ராத்திரிக்கு படுக்கைக்கு வீட்டுக்கு வந்துடறேன் என்றார் மாரிமுத்து .
ராணி சரி என்று ஒப்புக் கொண்டாள் . மறுநாள் பழக்கடைக்கு வந்த பெரியவங்க இளசுகள் மாரிமுத்து அண்ணே இல்லையா என்று கேட்டபடி சென்றனர் .
வியாபாரம் ரொம்ப டல்லு . ஐநூறு கூட கிடைக்கவில்லை. ராணிக்கு அப்ப தான் ஒரு உண்மை புரிஞ்சுது.
இந்த ஆளு வயசுக்கு தகுந்தா மாதிரி நேரத்துக்கு தகுந்தா மாதிரி இதமா பதமா பேசி வியாரம் செய்ய தெரிஞ்ச கில்லாடி நாம தான் தப்பா எடை போட்டுவிட்டோம் என்று மனதில் புலம்பினாள் ராணி .
அன்று முதல் மாரிமுத்துவின் வியாபார யுக்தியை திறமையை ரசித்து அவர் பேச்சில் சொக்கிப் போனாள் ராணி .
மனுஷங்களை கரெக்ட்டா எடை போடறதில மாரிமுத்து Money முத்து தான் என்பதை மனதார நினைத்து தன்னை அறியாமல் சபாஷ் போட்டாள் மனைவி ராணி ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
9842371679 .