tamilnadu epaper

வீழ்தலுக்கு பின்னான எழுதல்...

வீழ்தலுக்கு  பின்னான எழுதல்...

பல முறை
அறுந்தாலும்
விடாது
ஒரு முறை
சிலந்தி
பின்னி
விடுகிறது
தனக்கான
வலையை

குச்சிகள்
சருகுகள்
வீழ்ந்தாலும்
பறவை
விடா
முயற்சியாலேயே
எப்படியும்
கட்டித்தான்
விடுகிறது
தனக்காக
கூட்டை

பிறந்த 
குழந்தை
குப்புற 
விழுந்தால்
திரும்பவும்
முயன்று
விழுந்து
விடுகிறது
மல்லாக்க

தவழ்ந்து
இருக்கையில்
எழுந்து
நடக்கையில்
தவறி
விழுந்தால்
மீண்டும்
சலிக்காது
சந்தோஷமாய்
எழுந்து
நடந்து
விடுகிறது
ததக்கா
புதக்காவென...

விழுந்தால்
எழுதல்
வேண்டும்
மனிதன்

இல்லாது
போனால்
அவன்
மனிதனல்ல

வாழும் போதே
வீழ்ந்து விட்ட
அவன்
நடமாடும்
நடை பிணம்...

ஆறுமுகம் நாகப்பன்