" ராணியம்மா இறந்ததும் அவள் வீட்டில் கூட்டம் அலை மோதியது , உறவினர்கள் தெருவாசிகள் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய படி இருந்தது ராணியம்மா வீடு.
" ராணி அந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து மாமனார் மாமியார் பிறகு எட்டு குழந்தைகள் என பெரிய குடும்பியானாள் ராணி .
மாமனார் மாமியார் மறைவிற்கு பிறகு இருந்த சொற்ப இடத்தில் பிள்ளைகளை வைத்து காய்கறி கனி தோட்டம் அமைத்து அதுவே அவளது வாழ்க்கையாகவும் இருந்தது .
"கணவன் உடலம் குன்றி இறந்து விட வருமானம் பார்க்க அவள் உழைப்பே முதல் மூலதனம் . பிள்ளைகள் தான் அவள் சொத்து .
"காசு விசயத்தில் கறார் பேர் வழி . வருவோர் போவோர் தெருவாசி எல்லோரிடமும் சண்டை , அடுத்த நாள் வலிய சென்று பேசிவிடுவாள் ராணி .
யார் வீட்டிற்கும் பிள்ளைகளை சாப்பாட்டுக்கு போய் நிற்க விட மாட்டாள், எளிமை தான் முதல் விதை பார்த்து பார்த்து குடும்பத்தை வசதி ஆக்கினாள் ராணி .
" பிள்ளைகள் பெரிதாகி அனைவரும் திருமணம் செய்து கொண்டு விலக தனிமரமாய் அந்த வீட்டில் உழைப்பை தொடர்ந்து செய்து பணம் நிறைய இருந்தும் எளிமையான வாழ்க்கை தான் அவளின் தொடர்கதை.
இன்று வயது முதிர்வால் வீட்டிலேயே மகன் மடியில் ஆனந்த மரணம் . யாருக்கும் கிட்டாத பாக்கியம் .
ராணி மேல் எத்தனை கோபம் மன வருத்தம் தெரு, ஊராருக்கு இருந்தும்
வாய்விட்டு அழுதது மக்கள் . அதற்கு காரணம் ராணி யாரையும் ஏமாத்தியோ திருடியோ பொய் சொல்லியோ வாழவில்லை . தன் பிள்ளைகள் தான் உலகம் என்று வாழ்ந்தாள் .
உழைப்பு, நம்பிக்கை, எளிமை தான் இலக்கு என்று வாழ்ந்தாள் ராணி .
ராணி உடல் சுடுகாட்டுக்கு தயாராக தெரு முழுக்க கூட்டம் வழி விட்டது நின்றது . ராணிக்கு கிடைத்த வெகுமதி . வேற என்ன வேண்டும் மகராசிக்கு என்ற குரல் மிகுந்து ஒலித்துக் கொண்டே இருந்தது சுடுகாடு வரை இன்று .... "
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
- 9842371679 .