முழு ஆண்டு விடுமுறை வந்ததே..
பள்ளிகள் முடிந்து ஆனந்தமும் பொங்குதே..
இனி இரண்டு மாதங்கள் சுதந்திரமே..
கொண்டாட்டங்கள் நிறைந்து
மனசு திண்டாடுமே..
வயது வித்தியாசமின்றி மகிழ்ந்திடும் விடுமுறைதான்..
காயும் வெயிலனைத்தும்
பிள்ளைகள் தலையில்தான்!
பசி தாகம் வெப்பம் அறியாமல்..
நேரம் காலமின்றி
விளையாடி மகிழ்வோமே!
முதுகில் மொத்துகள் விழுந்தாலும் கவலையில்லையே..
பலநிற உடையணிந்து உறவுகளுடன் கூடிடுவோமே..
அருவிகளை தேடி மனம்தான் ஓடுமே..
மலைகளை நோக்கி
கூட்டமாய் பயனிப்போமே..
வெள்ளரி நுங்கு
இளநீரும்..
தர்பூசனி கிர்ணி மாம்பழமும்..
பழைய சாதம் சின்ன வெங்காயமும் குளுமையாக்குமே சூட்டுடம்பை..!
பாரம்பர்ய உணவுகளை ஆதரிப்போமே..
உடல்நலம் காத்து
வெப்பத்தை கடப்போமே..
கூழும் மோரும் குடிப்போமே..
எண்ணையில் பொறித்ததை தவிர்ப்போமே !
திராட்சை பழரசம் குடிப்போமே..
மாதுளை ஆரஞ்சு
சுவைப்போமே..!
தீய எண்ணங்கள் ஓடட்டும்..
நேர்மையானவை நெஞ்சில் நிறையட்டும்..!
வருங்கால சந்ததியினர் மகிழ்ந்திடவே
நீர்நிலை சுற்றுப்புரம்
காப்போமே..!
மக்கள் நாமே முடிவெடுத்தால்..
பூமிபந்தை காத்திடலாம்..!
கடவுள் அளித்த கொடையினையே
மனிதர் நாம் கெடுத்திட வேண்டாமே..!
-தஞ்சை உமாதேவி சேகர்