tamilnadu epaper

வேண்டாம் வெறுமை!

வேண்டாம் வெறுமை!

இளமையில் சோம்பல் தவிர்த்து
முதுமையில் வறுமையின்றி
வாழ்ந்திட்டால் இன்பமே.
எறும்பாக உழைத்தால்
என்றுமே உண்டு மகிழ்ச்சி.
தேனீயாக செயல்பட்டால்
சேமிப்பை உணரலாம்.
நிலவாக ஒளிர்ந்திடு
தென்றலாய் குளிர்ந்திடு
வாழ்வில் வேண்டாம் வெறுமை.
-------------------
அன்புள்ள அம்மா !
-------------------------
நான் உண்மையிலேயே
உன்னை ஒருநாளும்  மறக்க கூடாது
எப்போதும் நீ என்னையே சுற்றுகிறாய்
அருகில் உள்ள அனைவருக்கும்
அன்பையே அள்ளித்  தருகிறாய்.
விலைமதிப்பற்ற மெல்லிய புன்னகை
உன் முகத்தில்தான்  உள்ளது.
சோர்வடையச் செய்வதற்கு முன்
உன்னை பார்த்தால் போதுமே
நீ என் முதல் வழிகாட்டி அம்மா.
-------------------
எஸ். ரவீந்திரன்,  சென்னை -56