முதலில் யுபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள்" />

tamilnadu epaper

ஹேலி, நேட் சிவர் அதிரடி; மும்பைக்கு 3 ஆவது வெற்றி

ஹேலி, நேட் சிவர் அதிரடி; மும்பைக்கு 3 ஆவது வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 11"ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை புதன்கிழமை வென்றது.


முதலில் யுபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. அடுத்து மும்பை 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தேர்வு செய்தது. யுபி பேட்டிங்கில் கிரண் நவ்கிரே 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, கிரேஸ் ஹாரிஸ் " தினேஷ் பிருந்தா கூட்டணி அணியின் ஸ்கோரை பலப்படுத்தியது.


2"ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரிஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிருந்தாவும் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.


அடுத்து வந்த கேப்டன் தீப்தி சர்மா 4, டாலியா மெக்ராத் 1, ஸ்வேதா ஷெராவத் 19, ஷினெல் ஹென்றி 7, சோஃபி எக்லஸ்டன் 6, சாய்மா தாக்குர் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.


ஓவர்கள் முடிவில் உமா சேத்ரி 13, கிராந்தி கெüட் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நேட் சிவர் 3, ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா ஆகியோர் தலா 2, ஹேலி மேத்யூஸ், அமெலியா கெர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


பின்னர் 143 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில் யஸ்திகா பாட்டியா டக் அவுட் ஆனார்.


ஹேலி மேத்யூஸ் " நேட் சிவர் பிரன்ட் ஜோடி 2"ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.