அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்


திருவண்ணாமலை, செப்.25-


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 3-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள நேற்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டது. 

கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.

 தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். கோவில் தக்கார் டாக்டர் மீனாட்சிசுந்தரம், இணை ஆணையர் பரணிதரன்,திருக்கோயில் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%