அதிமுக சிவப்பு கம்பள வரவேற்பு காங்கிரசுக்கு தேவை இல்லை திருநாவுக்கரசர் திட்டவட்டம்

அதிமுக சிவப்பு கம்பள வரவேற்பு  காங்கிரசுக்கு தேவை இல்லை  திருநாவுக்கரசர் திட்டவட்டம்



திருப்பத்தூர், ஜூலை 22-

அதிமுக சிவப்பு கம்பளம் விரித்து கூட்டணிக்கு அழைத்தாலும் தேவை இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

 தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் வாணியம்பாடியில் அளித்த பேட்டி-

தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவையும், திமுக காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து வந்தன. அப்போது பேசப்பட்டவற்றை தற்போது செய்தியாக வெளியிட்டு வருவது சரியில்லை. பாஜக, அதிமுகவுக்கு இடையே கூட்டணி நல்லபடியாக இருக்கிறதா? என்றால் கேள்வி தான். பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் தான் தொடர் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக ஆசைப்படுகிறார். ஆகையால், இரண்டு கட்சிக்குள் எந்த கட்சியின் தலைமையில் கூட்டணி இருக்க போகிறது என்பதே அவர்களிடையே பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

திமுகவுக்கு ஆதரவு

ஆனால், காங்கிரஸ் கட்சியோ திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறோம். காங்கிரஸ் கட்சி இதுவரை ஆட்சியில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணியில் இருப்போம் என கூறவில்லை. காங்கிரசுக்கு அதிகாரம் வேண்டும் என நினைக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இருக்க விரும்புகிறோம். அந்த தெளிவு அதிமுக - பாஜக கூட்டணியில் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் எண்ணிக்கையில் சீட் கொடுப்பதை வரவேற்கிறோம். அவ்வாறு கேட்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. 

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க முடியும். அது போல் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமராக முடியும்.

• அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக கூறியிருக்கிறாரே?

திருமணம் ஆகாதவர்கள் தான் அந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு திருமணம் முடித்து, இணைந்து விட்டோம். ஆகையால் எங்களுக்கு அந்த சிவப்பு கம்பளம் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%