
" மறையோதும்
வேதியர்களால்
பஞ்ச புராணம்
ஓதும் ஓதுவார்களால் ..."
நித்தமும் செவி
குளிர்ந்து மனம்
கசிந்து முகம்
மலர்ந்து அருள்
தருகிறார்
இறைவன்...."
தாளமும் வாத்தியமும்
நாதஸ்வரமும்
இசைத்திட
இசையில் மயங்கி
நிற்கிறான்
இறைவன் ..."
பல்லக்கிலும்
தேரிலும்
பவனி வந்து
முடியாதவர்க்கும்
காட்சி தந்து
ஆட்சி செய்கிறான்
இறைவன் ..."
காலையில் பூபாளத்தோடு
நடை திறக்க
அர்த்தஜாம பூஜையோடு
நடை சாற்ற
இறைவன் மட்டும்
விழிப்பில் பக்தருக்காக .... "
உழவாரப் பணியையும்
தூய்மைப் பணியையும்
அன்னதானத்தையும்
இறைவன் நன்கு
பார்க்கிறான் ... "
சப்பரத்தில் ஏறி
திருக்குளத்தை
பார்வையிட்டு
கருணைப் பார்வையை
நீட்டுகிறான் ..."
நீராய் நெருப்பாய்
காற்றாய் ஆகாயமாய்
பூமியாய் பஞ்ச
பூதங்களாய் நின்று
நிழல் தருகிறான்
இறைவன் ....."
கண்டவர் சொன்னதில்லை
சொன்னவர்
கண்டதில்லை ... "
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?