வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 08.10.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 08.10.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் முதல் வணக்கம்.


அனைத்து அம்சங்களிலும் நிறைவான திருப்தி உணர்வை வாசகப் பெருமக்களுக்கு, சலிக்காமல், சளைக்காமல் வழங்கி வரும் ஆசிரியர் குழுமத்தின் அற்புதமான பணிக்கு 

மீண்டும் மீண்டும் நன்றி சொல்லும் போது, சிலிர்ப்பில்

நெஞ்சம் நனைகிறது.


தினசரி அதிகாலையில் நமது இ பேப்பரின் பக்கங்களை நகர்த்தி

நகர்த்தி பயனுள்ள தகவல்களை -- செய்திகளை உள் வாங்கும் போதெல்லாம்,

வேள்வி வேட்கையில் 

இயங்கும் இயக்கமாகவே, தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் நமக்குத் தோன்றுகிறது.


திட சிந்தனை, தெளிந்த நம்பிக்கை,

தூய அன்பு இவைகளின் சக்தி மிக்க சங்கமமாகவே 

உணரத் தோன்றுகிறது. சில நேரங்களில் இங்கே இது எப்படி சாத்தியம் என்ற நியாயமான கேள்வியும் தோன்றி 

வியக்க வைக்கிறது.


பாரபட்சம் இல்லாத அணுகுமுறையின் 

அழகிய நேர்த்தி அனைத்துப் பக்கங்களிலும் ஜொலி ஜொலிக்கும் விதம்,

பாட்டு வேந்தன் பாரதி யின், ' வியனுலகம் முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு ' என்னும் வைர வரிகளை நினைவுப் படுத்தி,

நெஞ்சம் இனிக்கச் செய்கிறது.


'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் '

என்று உரத்துச் சொல்லிச் சென்ற பெரும் புலவர் மூதாட்டி ஒளவையார் இன்று இருந்தால் எப்படி பாடி இருப்பார் தெரியுமா?


தமிழ் நாடு இ பேப்பரை வாசிக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று தான் 

முழங்கி இருப்பார்.


இதையெல்லாம் ஆசிரியர் குழுமத்தின் 

கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, வேறு எந்தத் தனிப்பட்ட காரணத்துக்காகவோ சொல்லவில்லை என்பதை விரிந்த பார்வையை இதயத் துடிப்பாகக் கொண்ட 

நம் வாசகப் பெருமக்கள் அனைவரும் நன்கு உணர்வார்கள்.


இதை எந்த அடிப்படையில் கூறுகிறேன் என்றால் 

நான் எழுதி வரும் வாசகர் கடிதங்களைப்

படித்து விட்டு, ' சரியா சொன்னீங்க நீங்க '

என்று உணர்ச்சிப் பூர்வமாக அலைபேசி மூலம் பேசி ஆனந்திக்கும் அன்பு உள்ளங்கள் இங்கே இருக்கிறார்கள்.


இந்த மாதிரியான அன்பான வாசகர்கள் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் நிரந்தர சொத்தாக, மாநிலம் எங்கும் பரந்து விரிந்து 

பண்பாடு காத்து பரவசம் அளித்த வண்ணம் உள்ளனர் என்பது ஆரோக்கியமான சூழல். 


கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி மேன்மையுற வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம்.


அருள் தரும் தெய்வம் இதழின் வளர்ச்சி நம்பிக்கையை வலுப் படுத்துகிறது.


என்றும் நம் இல்லங்களில் தெய்வம் இதழ் தொடர்ந்து அருள் ஒளி 

வீசிக் கொண்டே இருக்க வேண்டும்.


குறைந்த செலவில் நிறைந்த பயன் என்று உறுதியாக சொல்லக் கூடிய அளவுக்கு, உயர்வான, உன்னதமான விஷயங்களைத் தாங்கி வரும் தெய்வம் இதழுக்கு இன்றே --

இப்பொழுதே சந்தாதாரராகி, என்றென்றும் சந்தோஷம் காணுங்கள். சகல விதமான பாக்கியங்களையும் பெற்று பரிபூரணம் பெற்றிடுங்கள்.


இது விளம்பர கோஷம் இல்லை.

வேத வாழ்வின் தேடலுக்கான வெளிச்ச வாசம்,

வாசலும் தான்...!


வாழ்க வளமுடன் 

வாழ்க நலமுடன் 



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%