
அறுசீர் மண்டிலம்.
அறியாமை அகற்றும்
கல்வி
அறிவினையே ஆக்கும்
கல்வி
சிறப்பாக உயர்த்தும்
கல்வி
சீர்மையினை நல்கும்
கல்வி
புறங்கூறல் நீக்கும்
கல்வி
பொலிவைத்தான் தருமே
கல்வி
அறம்பாடும் நல்ல
கல்வி
அன்பைத்தான் கொடுக்கும்
கல்வி!
உயர்வான கருவி
கல்வி
உன்னதமாம் என்றும்
கல்வி
நயன்மையான கருவி
கல்வி
நானிலத்தில் உயர்ந்த
கல்வி
வியப்பளித்து நிற்கும்
கல்வி
வீறுடைத்து என்றும்
கல்வி
மயக்கத்தை நீக்கும்
கல்வி
மாண்புடைத்து என்றும்
*கல்வி*!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%