அறிஞர் அண்ணா காந்திநகர் மாவட்ட கிளை நூலகத்தில் 58வது நூலக வார விழா!
Nov 20 2025
21
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 58வது நூலக வார விழா 19.11.2025 காலை 9.30 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமை தாங்கினார். முன்னதாக துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.பிரேமா முன்னிலை வகித்து பேசினார்.
ஓய்வு பெற்ற பேராசிரியை எம்.எஸ்.கலைச்செல்வி 100 மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார்.
வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.விஜயகுமாரி, ஆறுமுகம், வாசகர் வட்ட தலைவர் பழனி உள்ளிட்டோர் பேசினர்.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் நல்நூலகர் தி.மஞ்சுளா, எ.சத்யவாணி ஆகியோர் நன்றி கூறினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?