
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
22,22 ஏ,ராமகிருஷ்ணா நகர் மெயின்
ரோடு, ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
வண்டியில் ஏற்றப்பட்ட இரண்டு வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், புஷ்ப
அலங்கார வளைவுகள், இவையெல்லாம் ஒரு சேர கலக்கப் பட்டு குப்பைத்
தொட்டிக்குப் போகத் தயாராக இருந் தன.
“ ஹும் ! பார்த்தீர்களா நம் நிலைமை யை..” என்று ஆரம்பித்தது வாழை மரம்.
ஏறக்குறைய அழும் நிலையிலேயே இருந்தது.?
“ கல்யாண மண்டபத்தில் நம்மை அழகு படுத்தி பார்த்தார்கள். ஃபோட்டோ,வீடி
யோவில் கூட நாம் இருக்கிறோம்.” என சொன்னது மாவிலைத் தோரணம் .
“ ம்..என்ன பிரயோஜனம் ? நமக்கு இருக்கிற மரியாதை மூன்று நாள்தான்.
அந்த மூன்று நாளும் நம்மைப் பார்த்து லயித்தவர்கள் இப்போது கண்டும் காணாதது போல் செல்கிறார்கள். “
“ அட நீ வேற ! காறித் துப்பும் அளவுக்கு நம்மை அருவருப்போடு பார்க்கிறா ர்கள். “ என்று ஆழ்ந்த மன வருத்ததுடன் சொன்னது புஷ்ப அலங்கார வளைவு.
“ அட நாமாவது ஒன்று சேர்ந்து விட்டோம். ஆனால் பாவம், ஆயிரக்க ணக்கான வாழை இலைகளை நினைத்தால்தான் பாவமாயிருக்கு! எல்லோரும் சாப்பிட்டக் கையோடு கசக்கி உடனே குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டார்கள். மீந்து போன பதார்த்தங்கள் கதம்பமாகி வீச்சமில்லே அடிக்கும் ? அதுதான் மனதுக்கு கஷ்டமாயிருக்கு ..” என்றது வாழைமரம்.
“ அது சரி, நாம மட்டுமென்ன அப்படியேவா இருந்திடப்போறோம்? குப்பைத் தொட்டி
யிலோ இல்லை காலியான இடத்திலோ நம்மை போட்டு விட்டு போய்க்கிட்டே இருப்பார்கள். ஆடு மாடு மேய்ந்து, மீதியிருக்கும் கச்சடாக்களை கார்ப்பரேஷன்காரங்க வந்து எடுத் துக்கிட்டுப் போய் கொடோன்ல டம்ப் பண்ணிவிடுவார்கள்..அழுகிப் போய் கிடக்க வேண்டியதுதான்..” பெருமூச்சொன்று விட்டது மாவிலைத் தோரணம் .
“ ஆக நாம அழகுக்காக வைக்கப் பட்டோம். இப்போதுஅவலத்துக்காக கொண்டு செல்லப்படுகிறோம்…
“ ஆமாம், ஆனால் வாழை அண்ணா ! சாப்பிட்ட வாழை இலைகள் குப்பைத் தொட்டிக்கு போறது க்கு முன்னால ஒரு பெரிய உதவி பண்ணியிருக்கு. என்னன்னா சூடாக சாப்பிடுப வர்களுக்கு தன் கிட்டேயிருக்கிற பச்சையம் என்கிற சத்தைக் கொடுத் திருக்கு. அதனால் தான் வாழை இலையில் சாப்பிடறது ஆரோக்கிய மானதுன்னு பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். “ என முடித்தது .
இதற்குள் வண்டிக்காரன் வந்துவிட கப் சிப் சைலண்ட் ஆனது எல்லாம் !
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?