வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 13.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 13.10.25


அன்புடையீர் 


வணக்கம். 13.10. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் பீகார் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தலா 101 இடங்களில் பாஜக ஜேடியு போட்டி என்ற செய்தி வடக்கே நடக்கும் அரசியலை மிக அருமையாக சொன்னது. பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது மிக்க நன்றி..


சீர்காழியில் ஸ்ரீ ப்ரேமிக வரதன் பஜன் மண்டத்தை சார்பில் ஸ்ரீ பத்மாவதி கல்யாணம் மிக அருமையான தகவல் பார்க்கும் போதே அந்த பஜனைக்கு சென்ற ஒரு உணர்வு வருவதால் மகிழ்ச்சியாக அதை பார்க்க முடியும் .


ஓய்வாக அமர்ந்திருந்தால் அது மூட்டு வலிக்கு தீர்வு அல்ல அசைந்து வேலை செய்வது தான் சிறந்த மருந்து என்று பலருக்கும் வரும் மூட்டு வலியை யோசித்து அதற்கு நலம் தரும் மருத்துவ பகுதியில் நல்ல ஆலோசனை வழங்கியது அருமை பாராட்டுக்கள்.


தீபாவளி வரப்போவதை ஒட்டி அதற்காக ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை செய்தது மிகவும் நல்ல தகவல்.. இதனால் பேராசைக்காரர்களுக்கு நல்ல ஒரு படிப்பினை சொல்லும் தகவலாக உணர்ந்தேன்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த எஸ் ஓ கே உபைத்துல்லா வரலாறு மிகவும் அருமை தெரியாத பல தலைவர்களை மிக அருமையாக அறிமுகம் படுத்தும் தங்கள் இந்த பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை வெள்ளிமலை என்ற அந்த படத்தை பார்த்தவுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாகும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


 பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை உடல் பருமனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை பற்றி மிக அழகாக சொன்னதும் பயனுள்ள தகவல்களை மிக அருமையாக எங்களுக்கு எடுத்துக்காட்டும் தங்களுடைய இந்த பணிக்கு பாராட்டுக்கள்.


திமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவி என்ற செய்தி மிகவும் அருமை சிறப்பு கிராம சபை கூட்டம் என்று நல்ல படங்களுடன் நல்ல தெளிவான செய்திகளை கொடுக்கும் 16- ம் பக்கத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 சுற்றுலா செல்வதால் நோய்களை மறக்கடிக்க செய்யும் அமைதியான தலங்கள் என்றும் அதில் என்னென்ன நமக்கு பயன்கள் என்றும் சுற்றுலா பக்கத்தில் சொன்னது பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


முதலமைச்சர் கோப்பை பலி தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கத்தினை புன்சிரிப்புடன் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றிய செய்தியும் படமும் பரவசமாக இருந்தது. கிரைம் கார்னர் நல்ல விழிப்புணர்வு தகவல்களை தருகிறது பாராட்டுக்கள்.


விளையாட்டு செய்திகள் பக்கத்திலிருந்து அனைத்து தகவல்களும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம் என்று அயல்நாட்டு செய்தியை மிக அழகாக சொன்னது. ரசித்து படிக்க வைத்தது.


 எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளாக இருந்தால் தித்திக்கும் திங்களாக மலர உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%