அழகிய பனை மர இணையர்களின் கதை...

அழகிய பனை மர இணையர்களின் கதை...


ஒரே இடத்தில்

ஆண்டுகள் பல கடந்தும் அமெரிக்காவின்

 இரட்டை கோபுரங்களை நினைவு கூறுகின்றன.


அறிஞர் அண்ணாவையும் ,

புலவர் கோவிந்தனாரையும் அடையாளப்படுத்தும் இடமானது.


அண்மையில்

 செந்திலை கௌதமன் அண்ணாவை 

புகழ் பாடி சென்றார்...


இணையர்களாய்

இணைந்தே

 இன்னுமும்

 பேசிக் கொண்டே இருக்கின்றன அவைகள்...


யாரும்

தொந்தரவுகள்

செய்வதில்லை.


விளையாட்டு திடல்

வசிப்பிடமானது

நேற்று வரை

பிரிவும் இல்லை

 பேதமும் இல்லை...


அந்த

விளையாட்டு திடலில்

நடுவர்களின்

தவறான தீர்ப்புக்கு 

தோல்வியும்

வெற்றியாகிருக்கலாம்.


உண்மையின்

 உரை கல்லாய் நிற்கும்

அவைகள்

எல்லாவற்றையும்

 பார்த்துக் கொண்டே

மௌனம் சாதிக்கின்றன.


பலரது உறவுகளை

புதுப்பித்தும்,

இனியர்களின் அன்பை

ஊக்குவித்தும்

தற்காலிக தங்குமிடமாய்

தந்தும் உதவுகின்றன.


இயற்கையின் கோபத்திற்கு

அஞ்சாமல்

நிலையாக நின்று

பாசத்தை பொழிகின்றீர்

 பிரியமுடன்...


செல்பி எடுப்பார்கள்

குல்பி ஐஸ் சாப்பிடுவார்கள்

சமயத்தில்

பல்பும் வாங்கிப் போவார்கள்.


ஆயிரமாயிரம் முகங்களை உள்வாங்கிய- நீர் சா(கா)ட்சிகளுக்காக

காத்திருக்க கட்டாயம்.



எறும்பூர் கை. செல்வகுமார் ,செய்யாறு.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%