கல்வி ஒன்றே மாணவர்களின் எதிர்கால சொத்து: பட்டமளிப்பு விழாவில் புதுவை தமிழ்ச் சங்க தலைவர் முத்து பேச்சு*
Sep 25 2025
40

வந்தவாசி, செப் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 26 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கல்விக் காவலர் பா.போஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தமிழக அரசின் மேனாள் மருத்துவ & ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஜெய.ராஜமூர்த்தி பங்கேற்று 730 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் பட்டங்களை பெறும் இளைஞர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்கும் திறன் மிக்கவர்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்தன், கல்லூரி இயக்குநர்கள் டிடிகே.ராதா, சிவசங்கரன், அப்பாண்டைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பட்டம் பெற வந்த மாணவ மாணவிகளில் சிலர் திருமணம் செய்து கைக்குழந்தையுடன் வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?