பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்


அறுசீர் மண்டிலம்.


பண்புடையார்

இருப்ப தாலே

பாரேதான்

இயங்கு தய்யா!

அன்புடையார்

இருப்ப தாலே

அகிலந்தான்

நடக்கு தய்யா!

இன்புடையார்

இருப்ப தாலே

இவ்வுலகு

இயங்கு தய்யா!

நண்புடையார்

இருப்ப தாலே

நல்லுலக.

நடக்கு தய்யா!


மாந்தரெனில்

பண்பு தேவை

மண்ணுக்கும்

பெருமை சேரும்!

ஏந்தவேண்டும்

பண்பு தம்மை

ஏற்றந்தான்

காணு மய்யா!

தீந்தமிழே

வளர வேண்டின்

தேர்தமிழர்

பண்பு சேர்க்க!

நாந்தமிழர்

என்ற எண்ணம்

நல்லபண்பின்

எடுத்துக் காட்டே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%