காகிதக் கப்பல்கள்

காகிதக் கப்பல்கள்


பிள்ளைப் பருவத்தின் 

அளப்பரிய கண்டுபிடிப்பு 


வீணான காகிதங்கள் 

வீதியில் கப்பலாக 

உலா வரும் 


குழந்தைகளுக்குக் குதூகலத்தைத் தரும்

பெரியவர்களுக்கும் 

ஆர்வத்தைத் தூண்டும் 


அறியா வயதில் 

 அரிச்சுவடி படித்த நாளில் 

ஆர்வமாய் விடும் 

காகிதக் கப்பலே 

குழந்தைகளின் 

எவரெஸ்ட் சிகரம் 


உள்ளத்தில் கள்ளமின்றி

உருவத்தில் வேறுபாடின்றி

ஆர்வமாய் ஒன்றையொன்று

 இடித்து மோதிக் கொள்ளும் 

 காகிதக் கப்பல்கள் 

அன்பின் சாட்சி


தேங்கிய மழைநீரின் 

குப்பைகள் கூட 

குழந்தைகளின் குதூகலத்தில் 

கோபுரமாய் மாறிவிடும்



குழந்தைகளின் கரம் பட்ட

கப்பல்களின் வகைகள் 

எடிசனின் கண்டுபிடிப்புக்குச்

 சவால் விடும்


சூழலில் குப்பைகள் சேர்ந்தாலும்

 சுகமான சுமையாக இதம் தரும்.



தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%