என் மேகம்

என் மேகம்


கரு நிறத்தில்

இருக்கும் பொழுது நீ என் கார்மேக கண்ணனை நினைவூட்டுகிறாய்


இயற்கையின் சீற்றத்தை இப்புவி தாஙாகாது என அறிவோம்


மழை,காற்று,

நீர் சீற்றத்தை அறிந்ததுண்டு.

அனுபவித்ததுண்டு


உன் சீற்றத்தையும்

 நீ சமீபமாய் வெடிப்பதன்

மூலம் உணர்ந்து கொண்டோம்.


உன்னையும் தொட்டு கொஞ்சிப்

பார்க்க ஆங்காங்கே நீயும் வந்தமர்கிறாய்

நிலத்தினிலே

சில நாட்களாய்

சில இடங்களில்


கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுணர்த்த வானத்தில் கூட்டம் கூட்டமாய் வலம் வருகிறாய்


மழை என்னும் ரூபத்தில் உன் கண்ணீர் சிந்தி

பசி எனும் துயர் துடைக்க பயிர் வளர உதவுகிறாய்.


தி.வெங்கடகிருஷ்ணன்

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%