ஆகலாம் கலாம்: டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் நாள் தொகுப்பு
Oct 14 2025
12

தன் வாழ்வின் பெரும்பாலான பகுதியை நாட்டிற்காகவும் மாணவர்களுக்காகவும் அர்ப்பணித்த அறிவியல் விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பிறந்த நாள்(அக்டோபர் 15). ஐநா சபையால் உலக மாணவர் தினமாக 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 15 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம். இளமையிலேயே ஏழ்மையின் பிடியில் சிக்கிய அப்துல்கலாம் அவர்களுக்கு கல்வியின் மீது அளவற்ற ஈடுபாடு இருந்தது. சிறந்த புத்திக் கூர்மையும், நுண்ணறிவும் கொண்ட இவர் படிப்பில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்திய விண்வெளித் துறையான ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் பணிக்குச் சேர்ந்தார்.
மிகச் சிறப்பாக ஐஎஸ்ஆர்ஓ-வில் பணியாற்றிய இவர் இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார். அதனைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் இதுதான் முன்னோடியாகும். இந்தத் திட்டத்தில் இவரது செயல்பாடு இந்தியா முழுக்க அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்களின் ஆற்றல் இந்தியாவை பெருமளவில் உயர்த்தியது.
அப்துல் கலாம் அவர்கள் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அப்துல் கலாம் அவர்களின் எழுத்துக்கள் தவறியதில்லை. மாணவர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பில் காலமானார்.
கலாம் எழுதிய புத்தகங்களில் அக்னிச் சிறகுகள், எனது பயணம், இந்தியா 2020 ஆகியவை மிகவும் பிரபலமாகும். அதுபோலவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா என இந்தியாவின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற தலைவராகவும் இவர் திகழ்கிறார்.
கலாமுக்கு சலாம்...!
வாழ்க அவரின் புகழ்..!
தொகுப்பு: பா. சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம், வந்தவாசி,
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?