
திருவண்ணாமலை மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாவட்ட கலைக் குழு சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஜெயசித்ரா மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் தற்பாதுகாப்பு,பெண் குழந்தை திருமணம் தடுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் தொடர்பான விழிப்புணர்வு மாணவ -மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறைவாக ஆசிரியர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?