ஆங்கிலப் புத்தாண்டே வருக

ஆங்கிலப் புத்தாண்டே வருக



அஹிம்சை அழிக்க வருக


ஆரோக்கிய வாழ்வு தருக


இயல் இசை நாடகம் கொண்டு


ஈசன் திருவடிப் பணிந்து


உவந்து மகிழ்ந்து நெகிழ்ந்து


ஊரும் உறவுமாய் சேர்ந்து


எண்ணங்கள் யாவும் சிறந்து


ஏற்றங்கள் தந்தே ஒளிர்ந்து


ஐயமும் இன்றியே வாழ்ந்து


ஒவ்வொரு நாளும் எழுந்து


ஓங்கார நாதம் பொழிந்து


ஔவையின் மூதுரை அறிந்து


அஃதே பலமாய் கொண்டு


அனுதினம் வாழ்ந்திட வருக


ஆங்கிலப் புத்தாண்டே வருக


வி.பிரபாவதி 

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%