ஆட்டோவில் ஏறிய பெண் காவலர் 2 கி.மீ. தூரம் கடத்தல்: மது போதையுடன் வாகனத்தை ஓட்டிய நபர் கைது

ஆட்டோவில் ஏறிய பெண் காவலர் 2 கி.மீ. தூரம் கடத்தல்: மது போதையுடன் வாகனத்தை ஓட்டிய நபர் கைது


 

சென்னை: ​போக்​கு​வரத்து பெண் போலீஸை, போதை ஆசாமி ஆட்டோ​வில் கடத்​திச் சென்ற சம்​பவம் மயி​லாப்​பூரில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.


மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அருகே மெட்ரோ ரயில் வழித்​தடம் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதனால் அங்கு சில பகு​தி​கள் ஒரு வழிப்​பாதை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளன.


அவ்​வாறு ஒரு​வழிப் பாதை​யாக மாற்​றப்​பட்ட மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் தெற்கு மாட​வீதி வழி​யாக நேற்று முன்​தினம் இரவு ஆட்டோ ஓட்​டுநர் ஒரு​வர் தடையை மீறி வேக​மாக வந்​தார்.


ஆட்டோ பறிமுதல்: இதை அந்த பகு​தி​யில் போக்​கு​வரத்தை ஒழுங்​குபடுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த பெண் காவலர் கவனித்​தார். விரைந்து சென்று ஆட்​டோவை தடுத்து நிறுத்​தி​னார்.


ஆனால் அந்த ஆட்டோ ஓட்​டுநர் வாக​னத்தை நிறுத்​தாமல் தொடர்ந்து வேக​மாக சென்று கொண்​டிருந்​தார். இதையடுத்து ஆட்டோவை தடுத்து நிறுத்​தும் வகை​யில் ஆட்டோவுக்​குள் அந்த பெண் காவலர் துணிந்து தாவி ஏறி​னார்.


ஆட்டோ ஓட்​டுநரை நிற்​கும்​படி, பின் சீட்​டில் இருந்​த​வாறு கண்​டித்​தார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்​டுநரோ வாக​னத்தை இன்​னும் வேக​மாக இயக்க ஆரம்​பித்​தார். 2 கிலோ மீட்​டர் தொலை​வைத் தாண்​டி​யும் ஆட்டோ நிற்​காமல் சென்று கொண்​டிருந்​தது. நிலைமை கை மீறு​வதை உணர்ந்த போக்​கு​வரத்து பெண் காவலர் கூச்​சலிட்​டார்.


இதைப் பார்த்த அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் சம்​பந்​தப்​பட்ட ஆட்டோவை மடக்கி நிறுத்​தினர். அதன் பிறகு​தான் ஆட்டோ ஓட்​டுநர் மது போதை​யில் இருந்​தது தெரிந்​தது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்​ததோடு, பெண் காவலர் எங்கு ஆட்டோவை தடுத்து நிறுத்​தி​னாரோ அங்​கேயே அழைத்​துச் சென்று விடும்​படி கண்​டிப்​புடன் தெரி​வித்​தார்.


இதையடுத்​து, ஆட்டோ ஓட்​டுநர் பெண் காவலரை அவர் பணி​யில் இருந்த இடத்​திலேயே மீண்​டும் அழைத்​துச் சென்று விட்​டார். பின்​னர் ஆட்டோவை பறி​முதல் செய்து போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%