மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: 3 பேர் கைது

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: 3 பேர் கைது

அயோத்தியாப்பட்டணம் அருகே மூதாட்டியை கொலை செய்து, நகை திருடிய வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் கடந்த செப்.29 ஆம் தேதி உண்ணாமலையை (75) என்பவரை அடை யாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவ ரிடமிருந்த 3 பவுன் தங்க நகைகளை கொள்ளைய டித்துச் சென்றனர். இதுகுறித்து ஆதாயத்திற்காக கொலை செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரிப்பட்டி போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் களை தேடி வந்தனர். இவ்வழக்கில் சேலம் பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (37), இளையரா மன் (55), பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பசப் பலூரைச் சேர்ந்த ரஞ்சித் (27) ஆகிய 3 பேரை காரிப் பட்டி போலீசார் வெள்ளியன்று இரவு கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணை யில், வெவ்வேறு குற்ற வழக்குகளில் கைது செய் யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, இவர்கள் 3 பேரும் நண்பர்களாகி ஜாமீனில் வெளியே வந்ததும் கூட்டுசேர்ந்து, காரிப்பட்டி பகுதி யில் பல்வேறு இடங்களில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 9 பவுன் தங்க நகைகளை போலீசார் பறி முதல் செய்து, தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%