பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

குடும்பப் பிரச்சினையால் பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு பிரி வில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் அந்தோணி மாதா (30). விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம்ஆண்டு யோவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிஷ் ஜோஸ்வா (10), ஆடன் ஜெபிக் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் அந்தோணி மாதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரண மாக கணவர் யோவானை பிரிந்து இரண்டு மகன்களுடன் அம்பத்தூர் சோழபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் பல்வேறு காரணங்களால் மன அழுத்த த்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணி முடிந்து அந்தோணி மாதா வீட்டுக்கு வந்துள்ளார். இதன் பிறகு அவர் நள்ளிரவில் படுக்கையறையில் மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் காவல் துறையினர் அந்தோணி மாதா சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%