வெடிபொருள் கிடங்கு உரிமையாளர் கைது

வெடிபொருள் கிடங்கு உரிமையாளர் கைது

கடத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி வெடி பொருட்களை விற்பனை செய்தவரை காவல் துறையி னர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் விதி களை மீறி வெடிபொருள் கிடங்கு செயல்பட்டு வருவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடத்தூர் காவல் ஆய்லாளர் வசந்தா தலைமை யிலான போலீசார், அப்பகுதியிலுள்ள சவுந்தர்ரா ஜன் (69) என்பவருக்கு சொந்தமான வெடிபொருள் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங் களை முறையாக பதிவு செய்யாமல், லாப நோக்கத் தோடு, பலருக்கு வெடி மருந்துகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, செப்.6 முதல் 16 ஆம் தேதி வரை, அதிகளவில் விற்பனை செய்தது தெரியவந்தது. மொத்தம் 50 கிலோ வெடி மருந்து, எலக்ட்ரிக் டெட்டனேட்டர் 10, 750 மீட்டர் ஒயர் உள்ளிட்டவை விதிமுறைக்குப் புறம்பாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குடோன் உரிமையாளர் சவுந்தர்ராஜனை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%