ஆவடியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மளிகைக் கடைக்காரரிடம் செல்போன் வாங்கி மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு போலீஸ் வலை

ஆவடி, அக். 6–
மளிகைக் கடைக்காரரிடம் செல்போனை வாங்கி ஆவடியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஆவடியில் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதைத் தொடர்ந்து ஆவடி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
மேலும் போலீசார் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த செல்போன் எண் ஆவடி கன்னிகாபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்காரர் ஜெயக்குமார் என்ற முதியவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இன்று காலை அந்த கடைக்கு வந்த பள்ளி சிறுவன் ஒருவன் தன்னிடம் அவசரமாக பேச வேண்டும் என்று கூறியதால் எனது செல்போனை கொடுத்தேன். ஆனால் அந்த சிறுவன் யாரிடம் பேசினான் என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளி திறந்த முதல் நாளில் பள்ளிகளுக்கு சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?