
லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் லக்னோவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 98 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 103 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது. துருவ் ஜூரெல் 113 ரன்களும், தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 141.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 531 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
தனது 7-வது முதல்தர போட்டி சதத்தை விளாசிய தேவ்தத் படிக்கல் 281 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரெல் 197 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன 140 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சாம் கான்ஸ்டாஸ் 27, கேம்ப்பெல் கெல்லாவே 24 ரன்கள் எடுத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?