புரட்டாசி மாதம் வைணவக் கோயில் இலவச ஆன்மிகப் பயணம் துவக்கம்

புரட்டாசி மாதம் வைணவக் கோயில் இலவச ஆன்மிகப் பயணம் துவக்கம்

சென்னை, செப் 20–


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா புரட்டாசி மாத வைணவ திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தை இன்று திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 70 பக்தர்களுக்கு பயண வழிப்பைகளையும், திருக்கோயில் பிரசாதங்களையும் வழங்கி ஆன்மிகப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களிலிருந்து 500 பக்தர்கள் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.


2025 – 2026–ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில், “புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி, சிறப்புப் பணி அலுவலர் ச.லட்சுமணன், இணை ஆணையர்கள் இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி, திருக்கோயில் துணை ஆணையர் சி.நித்யா, உதவி ஆணையர் கி.பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%