
அறுசீர் ஆசிரிய மண்டிலம்.
இல்லத்தைக் கட்டிக்
காப்பவள்
இனிமையை என்றும்
சேர்ப்பவள்
உள்ளத்தை இல்லில்
வைப்பவள்
உன்னதமாய்ப் பணிகள்
செய்பவள்!
அள்ளித்தான் அன்பைத்
தருபவள்
அன்போடு அருளளும்
கொடுப்பவள்
துள்ளித்தான் வேலை
செய்பவள்
தேர்ந்தநல் இல்லத்(து)
அரசியன்றோ!
எல்லோர்க்கும் முன்னால்
எழுபவள்
ஏற்றமுறு உணவைச்
சமைப்பவள்
நல்லனவே என்றும்
புரிபவள்
நாளெல்லாம் பொன்றாப்
புகழினள்!
சொல்லாலே அனைத்தும்
புரிபவள்
சுவையான உணவைச்
சமைப்பவள்
சொல்லரிய செயல்கள்
முறையாக
செய்வாள்இல்
லத்தின்
அராசியன்றோ!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%