நிலா..நிலா..ஓடி வா!

நிலா..நிலா..ஓடி வா!



நிலம் உறங்கும் வரை அந்த நிலா உறங்காது.! நிலா உறங்க வில்லை எனில் என் மனம் உறங்காது!


நிலா கதைகள் கேட்காமல் என் செவி உறங்காது! அது உலா வரும் பொழுது வரை நம் புவி உறங்காது!


காலை நீட்டி அவ்வைப்பாட்டி அமர்ந்திருப்பாளாம்! கதையுரைத்து எனது பாட்டி எனை வளர்த்தாளாம்!


நிலா காட்டி தாயொருத்தி சோறு ஊட்டினாள்! அந்த நிலா முகம் தனைக்காட்டி தமிழை ஊட்டினாள்!


நிலா வெளிச்சம் சிறுவர் நாங்கள் ஆடிப் பாடுவோம்.. நிலா ஔியில் கோட்டை வாசல் வீதி கூடுவோம்!


நிலாச் சோறு ஆற்றங்கரையில் அமர்ந்து உண்ணுவோம்! நிலா காலம் காதல் வலை நாங்கள் வீசுவோம்! 


நிலா வந்த இரவெல்லாம் தெரு கூத்து நடத்துவோம்.. நிலா வரா நாட்களிலே ஏக்கம் கொள்ளுவோம்!


நிலாப் பற்றி கவிதைகளை எழுதிப் பாடுவோம்! நிலா இல்லை என்றால் நாங்கள் எதனைப் பாடுவோம்?


நிலாக்காலம் ஓடம் ஏறி நதியில் ஆடுவோம்.. நிலாக்காலம் களத்துமேட்டில் ஒன்று கூடுவோம்!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%