கவிஞன்

கவிஞன்


கவிதை யென்று சொல்லிக் கொண்டு ஏதோ எழுதினேன்! அது கவிதை யென்று யாரும் சொன்னால் மகிழ்ச்சி அடைகிறேன்..! கணத்துப் போன இதய பாரம் இறக்கி வைக்கிறேன்! ஒரு கணப்பொழுது மகிழ்ச்சியினை எதிர் பார்த்து நிற்கிறேன்!


போதும்.. போதும்.. போதும் இந்த போலி கௌரவம்! அதை புரிந்து கொள்ளும் சமயம் வர.. மௌனி யாகிறேன்!


எழுதியவர் எழுதியதை திரும்ப எழுதினேன்.. நான் எழுதுவதாய் எழுதும் போது நினைத்துக் கொள்கிறேன்! 


உழுதநிலம் உழுது உழுது உணர்ச்சிக் கொள்கிறேன்! பழுதில்லாத விதை எனதாய் நினைத்துக் கொள்கிறேன்!


அழுது அழுது சிற்சிலதை சொல்ல முயல்கிறேன்! ஆசைநிலம் வந்து விழுந்து அவதி கொள்கிறேன்!

விழுதுகளை நம்பி நின்ற மரங்களைப் போல.. எழுதுகோலை நம்பி இங்கு பயணம் தொடர்கிறேன்!


போதும்.. போதும்.. போதுமிந்த போலி கௌரவம்.! அதை புரிந்து கொள்ளும் சமயம் வர மௌனி யாகிறேன்!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%