ஏனோ இந்த மாற்றம்.?

ஏனோ இந்த மாற்றம்.?


உறவுகளே மாறியது ஏனடா கண்ணா?

உலகவாழ்வு என்பதுதான்

ஏன்னடா கண்ணா..!

பாசமிங்கே வேசமிட்டும்

மேடைகள் கண்ணா..

நாடகமே உலகமென்று கூறடா கண்ணா.!


அந்தகாலம் போல இல்லை போகட்டும் கண்ணா..

அன்றில்களின் கூடுகளைத் தேடடா கண்ணா..

கன்றும் பசுவும் வேறு வேறு ஆனதே கண்ணா!

கதையல்ல நிஜமென்று கூறடா கண்ணா.!


ஈரமுடைய மண்கலந்து பிறந்தது கண்ணா..

ஈதல் இசைபட வாழ்ந்தது கண்ணா..

பாரமின்று சேர்ந்ததிங்கு ஏனடா கண்ணா.. படைத்தவனை கேட்பது யார் கூறடா கண்ணா!


ஆதியினம் ஆண்டகதை தெரியுமா கண்ணா.. அன்பு அறம் என்றதெல்லாம் வாழ்வியல் கண்ணா..

நீதிநெறி தவறாமல் ஆண்டனர் கண்ணா.. வீதியிலே நின்ற கதை கூறடா கண்ணா!


ஒரூவனுக்கு ஒருத்தியென்று வாழ்ந்த தொரு காலம்.. உலக ஆசை அனைத்தும் இங்கு துறந்த தொரு கோலம்..

இன்று அந்த பண்புநிலை மாறியதேனோ..?

இதனையெல்லாம் நினைத்தபடி வாழ்ந்திடு கண்ணா!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%