உக்கல்அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் வரும் 21ஆம் தேதி நவராத்திரி திருவிழா கொடியேற்றம்
Sep 17 2025
150
உக்கல்அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் வரும் 21ஆம் தேதி நவராத்திரி திருவிழா கொடியேற்றம்:மகா சண்டி ஹோமம் நடைபெறும்.
செய்யாறு செப் .18,
செய்யறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் வரும் 21ஆம் தேதி அமாவாசை அன்று கொடியேற்றி ,நவராத்திரி திருவிழா துவங்க உள்ளது. அன்று மாலை 4 மணிக்கு மகா யாகசாலையும், ஐந்து மணிக்கு பூரணப்பட்டு ஆக்ருதியும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற உள்ளது.
வரும் இரண்டாம் தேதி வியாழக்கிழமை பிரசித்தி பெற்ற மகா சண்டி ஓமம் ஆலய குரு சங்கர் குருஜியால் நடத்த உள்ளது. அதனைத் தொடர்ந்து நவராத்திரி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். தினமும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும், மதியம் மற்றும் இரவு சிறப்பு அன்னதானமும் வழங்கப்படும்.
பிரதி புதன் ,வெள்ளிக்கிழமை நாட்களில் சண்டிகாசுர நித்தமா பூஜை நடைபெறும். பூஜைகளில் பக்தி உடன் கலந்து கொள்பவருக்கு மங்கள குங்குமத்துடன் அம்பாள் அனுக்கிரகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் இத்தருனத்தை பயன்படுத்தி அம்பாள் அருள் பெற வேண்டுமாய் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?