
இன்னமும் நான் நடந்து கொண்டே இருக்கிறேன்.
பாதையில் நல்லவர்கள் பலரைச் சந்தித்தேன்.
ஒவ்வொருவரிடத்திலும் ஒரு புதிய ஒளி,
ஒரு புதிய பாடம்,
ஒரு சந்தோஷம்.
நல்லவர்களோடு நடந்த தருணங்கள்
எனது நினைவுகளில் நின்று கொண்டே கொண்டிருக்கிறது—
அந்த புன்னகை, அந்த நெருக்கம்,
எனது பயணத்துக்கு புதிய வண்ணம் பூசுகிறது.
நாம் எவ்வளவு திட்டமிட்டாலும்
வாழ்க்கை தன் கணக்கை தானே போடும்.
நான் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவும்
எனக்கு ஒரு நல்ல காரணத்துடன் வந்து சேருகிறது. அந்த காரணம் என்னிடத்தில் நல்லவையாய் மட்டுமே இருக்கிறது
புரிந்து கொண்டவர்கள் எனக்குள்
ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கிறார்கள்;
புரியாதவர்கள் கூட
என்னை மகிழ வைக்கும் புதிய கேள்விகளை எழுப்புகிறார்கள்.
குறைகள் எல்லோருக்கும் உண்டு—
ஆனால் அந்த குறைகளைத் தாண்டி
ஒளிரும் ஒரு நல்ல குணம்
ஒவ்வொருவரிலும் காண முடிகிறது.
அதனால்தான் என் இதயம்
மீண்டும் மீண்டும் துடிக்கிறது.
வாருங்கள் நண்பர்களே,
இந்தப் பாதையில் இன்னும் பல
வெற்றிகள் காத்திருக்கிறது.
இன்னும் நான் நடந்து கொண்டே இருக்கிறேன்.
ஒவ்வொரு அடியும்
நம்பிக்கையுடன்,
நன்றியுடன்,
மகிழ்ச்சியுடன்.
புன்னகையுடன்
என் பயணம் முடிவில்லாதது—
ஆனால் அதுவே அதன் அழகு.
இவை தான் எனது வெற்றி.
என் பயணம் இங்கே இப்படி தான் தொடங்கியது.
------
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?