உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 742 பேருக்கு நல திட்ட உதவி: அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்

உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 742 பேருக்கு நல திட்ட உதவி: அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்



நாமக்கல், அக். 1–


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், 742 பயனாளிகளுக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


அமைச்சர் பேசியதாவது:


“நாமக்கல் மாவட்டத்தில் 238 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இதுவரை 226 முகாம்களில் 97,593 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மட்டும் 66,876 மனுக்கள் கிடைத்துள்ளன. மகளிர் விடியல் பயண திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முகாம்களை சிறப்பாக நடத்தும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு நன்றி” என்றார்.


இதேபோல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, நகராட்சி, ஊரக வளர்ச்சி, மின்சாரம், தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலனுதவிகள் வழங்கப்பட்டன.


மொத்தம் 742 பேருக்கு ரூ.70.42 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், ராசிபுரம் அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ச.பிரபாகரன், பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி, உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) இந்தியா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%