
இரவு முடிய பளிச் வெளிச்சம் வரும்,
மேகங்களில் பொன் நிறம் அழகாக பிறக்கும்.
உள்ளம் வருடும் காற்றில் நம்பிக்கை வரும்,
மண்ணில் மலர்கள் அதரம் விரித்து சிரித்து மலரும்
புள்ளினகள் பாடும் இசையில் நாள் தொடங்கும்,
புதிய வழிகள் நமக்காக திறக்கும்.
நிழல் நீங்கி நெஞ்சில் ஒளி வரும் நேரம்,
விடியலின் வண்ணம் கனவாகும்
மின்னும் அந்த ஒளி நம்பிக்கையின் விதை,
ஒவ்வோர் விடியலும் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு அச்சாரமிடும் நேரம் .
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%